இந்தியா

பெண்ணை தாக்கிய நால்வர் மீது வழக்கு

Added : மார் 21, 2020
Share
Advertisement

புதுச்சேரி; ஏலச்சீட்டு தகறாறில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த பெண் உள்ளிட்ட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.நைனார்மண்டபம், சுதானா நகர் அண்ணா வீதியை சேர்ந்தவர் பாபு,45; இவரது மனைவி ஜமுனா,42; காதி வஸ்திராலயத்தில் பணியாற்றி வருகிறார். இவர், துலுக்கானந்தம்மன் நகர், அம்புஜம் என்பவரிடம் ஏலச்சீட்டு கட்டி வந்தார். சீட்டு முடிந்தும் ஜமுனாவுக்கு முதிர்வு தொகையான ரூ.2 லட்சத்து 20 ஆயிரத்தை கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார்.இந்நிலையில் ஜமுனா கடந்தாண்டு நவம்பர் மாதம் 14ம் தேதி தேதி அம்புஜத்தின் வீட்டிற்கு சென்று ஏலச்சீட்டு பணத்தை கேட்டார். அப்போது அம்புஜம், அவரது கணவர் சக்கரபாணி 48, இவர்களது மகன்கள் சதீஷ், நித்தீஷ் ஆகியோர் ஜமுனாவை ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். .இது குறித்து ஜமுனா நேற்றுமுன்தினம் கொடுத்த புகாரின் பேரில் அம்புஜம் உள்ளிட்ட நான்கு பேர் மீது முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X