இந்தியா

டிரைவிங் லைசென்ஸ் வழங்கும் பணி வரும் 31ம் தேதி வரை நிறுத்தம்

Added : மார் 21, 2020
Share
Advertisement

புதுச்சேரி: பழகுனர் மற்றும் ஓட்டுநர் உரிமத்திற்கான தேர்வு மார்ச் 31ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க அரசு தொடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனையொட்டி, போக்குவரத்து துறையில் பழகுனர் மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதால், கொரோனா வைரஸ் தொற்று பரவ வாய்ப்புண்டு.இதன் காரணமாக போக்குவரத்து துறையில் பழகுனர் மற்றும் ஓட்டுநர் உரிமத்திற்கான தேர்வு தற்காலிகமாக மார்ச் 31 ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இது புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் உள்ள அனைத்து போக்குவரத்து அலுவலகங்களுக்கும் பொருந்தும். எனவே பொதுமக்கள் பழகுனர், ஓட்டுநர் தேர்விற்காக போக்குவரத்து துறையை வரும் 31ம் தேதி வரை அணுக வேண்டாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X