இந்தியா

சிபாரிசு இல்லாத நோயாளிகள் இறக்கும் சூழல்

Added : மார் 21, 2020
Share
Advertisement

புதுச்சேரி: அரசு மருத்துவமனையில் சிபாரிசு இல்லாத நோயாளிகள் அனாதையாக சாகும் சூழ்நிலை உள்ளதாக அன்பழகன் எம்.எல்.ஏ., குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:கொரோனா வீரியத்தை கண்டு, மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவித்த பிறகும், புதுச்சேரி சுகாதாரத்துறை மிக அலட்சியத்துடன் நடக்கிறது. சுகாதாரத்துறையில், கொரோனா பரிசோதிக்க தெர்மல் மீட்டர், மாஸ்க், கிருமி நாசினி உள்ளிட்ட எந்த உபகரணமும் இல்லை.தினந்தோறும் கூட்டம் என போலி அரசியல் நாடகம் நடத்தி வருகின்றனர். கொரோனா தடுப்பிற்கு நிதி ஒதுக்கியும், எந்தவித அத்தியாவசிய பொருளும் வாங்கவில்லை. சாதாரண காய்ச்சலுக்கு கூட சிகிச்சை கிடைப்பதில்லை. பிற்பகல் 2:00 மணிக்கு பிறகு, மருத்துவமனை செல்லும் நோயாளிக்கு, அமைச்சர், எம்.எல்.ஏ. சிபாரிசு இருந்தால் தான் டாக்டர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். சிபாரிசு இல்லாத நோயாளிகள் அனாதையாக சாகும் நிலைதாசன் உள்ளது.சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை டாக்டர்கள் கவனிப்பது கிடையாது. தரமற்ற மருந்து மாத்திரைகள், மருத்துவ உபகரணங்கள், கமிஷன் தொகைக்காக வாங்கப்படுகிறது. இதில், மிகப்பெரிய முறைகேடு நடக்கிறது. மருந்து மாத்திரை வாங்குவதில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கவர்னர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.கொரோனா வீரியத்தை உணர்ந்து, பிரதமர் நரோந்திரமோடி நாளை 22ம் தேதி ஊரடங்கு உத்தரவு அறிவித்துள்ளார். நாட்டில் பல நகரங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு மனித உயிரை விட வருமானம் பெரிதல்ல என உணர்ந்து செயல்பட வேண்டும். மாநிலத்தின் அனைத்து பணிகளையும் அரசு முடக்கி, தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும். போர்க்கால அடிப்படையில் மக்களை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசின் உத்தரவுகளை அலட்சியம் செய்யக்கூடாது. கலெக்டர், 144 தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும். புதுச்சேரிக்கு வெளிமாநில சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை விதிக்க வேண்டும். வெளிமாநில ரயில்களுக்கும் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X