ஷீனா போரா கொலை வழக்கு: ஜாமினில் வெளியே வந்தார் பீட்டர் முகர்ஜி

Updated : மார் 21, 2020 | Added : மார் 21, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
ஷீனா போரா ,கொலை, வழக்கு,பீட்டர் முகர்ஜி,ஜாமின்

மும்பை; ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, பிரபல 'டிவி' நிறுவன முன்னாள் அதிகாரி, பீட்டர் முகர்ஜி, நேற்று ஜாமினில் வெளியே வந்தார்.

மும்பையைச் சேர்ந்த, பிரபல 'டிவி' நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி, பீட்டர் முகர்ஜி. இவரது இரண்டாவது மனைவி, இந்திராணி, தன் முதல் கணவருக்கு பிறந்த ஷீனா போரா 24, பீட்டர் முகர்ஜியின் மகன் ராகுலை காதலிப்பதை அறிந்து, அவரை, 2012ல் கொலை செய்தார். இந்த வழக்கில், கொலைக்கு உடந்தையாக இருந்த டிரைவர் கொடுத்த வாக்குமூலத்தையடுத்து, இந்திராணி, பீட்டர் முகர்ஜி உள்ளிட்டோர் 2015-ம் ஆணடு கைது செய்யப்பட்டனர்,


latest tamil news




மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பீட்டர் முகர்ஜி, ஜாமின் கேட்டு மும்பை சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் பல முறை தாக்கல் செய்த மனு தள்ளுபடியான நிலையில், மும்பை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கோரி கடந்த பிப்.6-ம் தேதி மனு தாக்கல் செய்தார். இதில் பீட்டர் முகர்ஜி ரூ. 2 லட்சம் பிணைய தொகை அளித்ததன் பேரில் உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியதையடுத்து 5 ஆண்டு சிறை வாசத்திற்கு பிறகு நேற்று சிறையில் இருந்து வெளியே வந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
21-மார்-202014:58:52 IST Report Abuse
 Muruga Vel பீட்டர்.. பாவம் ..
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
21-மார்-202014:32:26 IST Report Abuse
Lion Drsekar இப்போதெல்லாம் பெயரை கேட்டாலே அதிருது இல்ல ரேஷன் கார்டு அச்சடித்து கையும் களவுமாக பிடிபட்ட அரசு அதிகாரிகள் காவலர்கள் முன்னால் வீடியோ வாட்சப்பில் வந்தது பெயரை கேட்டதும் அதிருது இல்ல இப்போ எல்லாமே பெயரில்தான் இருக்கிறது, வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
21-மார்-202012:27:14 IST Report Abuse
K.Sugavanam சரி..சரி...புரியுது...புரியுது..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X