பொது செய்தி

தமிழ்நாடு

4,629 விவசாயிகளுக்கு ரூ.69 கோடி

Added : மார் 21, 2020
Share
Advertisement
மதுரை : மதுரை மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு 4629 விவசாயிகளுக்கு ரூ.69 கோடி வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் வாடிப்பட்டி, மேலுார் உள்ளிட்ட ஆறு தாலுக்காக்களில் சாகுபடி செய்யப்பட்ட நெல் அறுவடை துவங்கியது. விவசாயிகள் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்பதை தவிர்க்க நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் 88 இடங்களில் கொள்முதல்

மதுரை : மதுரை மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு 4629 விவசாயிகளுக்கு ரூ.69 கோடி வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் வாடிப்பட்டி, மேலுார் உள்ளிட்ட ஆறு தாலுக்காக்களில் சாகுபடி செய்யப்பட்ட நெல் அறுவடை துவங்கியது. விவசாயிகள் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்பதை தவிர்க்க நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் 88 இடங்களில் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டன. சோழவந்தான் உள்ளிட்ட சில பகுதிகளில் நெல் அறுவடை முடிந்ததையடுத்து 17 கொள்முதல் மையங்கள் மூடப்பட்டன. சில பகுதிகளில் அறுவடை நடப்பதால் மற்ற மையங்கள் தொடர்ந்து செயல்படுகின்றன. கொள்முதல் செய்யப்படும் நெல் கப்பலுார், ஆஸ்டின்பட்டி கிட்டங்கியில் அடுக்கி வைக்கப்படுகின்றன. நேற்று கிட்டங்கியை சிவில் சப்ளை கார்ப்பரேஷன் மண்டலமேலாளர் புகாரி, உதவி மேலாளர் திருமுருகன் ஆய்வு செய்தனர்.

அதிகாரிகள் கூறுகையில், 'இதுவரை கார்ப்பரேஷன் மற்றும் கூட்டுறவு மூலம் 48.229 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கார்ப்பரேஷன் சார்பில் கொள்முதல் நெல்லுக்கு 4629 விவசாயிகளுக்கு ரூ.69 கோடி வரை வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது, ' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X