தமிழ்நாடு

அறிவுறுத்தல்! பணி டாக்டர், நர்ஸ்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய ... மக்கள் தேவையின்றி வெளிவருவதை தவிர்க்க

Added : மார் 21, 2020
Share
Advertisement
 அறிவுறுத்தல்! பணி டாக்டர், நர்ஸ்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய ... மக்கள் தேவையின்றி வெளிவருவதை தவிர்க்க

மதுரை : மதுரை அரசு மருத்துவமனைகளில் பணி டாக்டர், நர்ஸ் பணியாளர்கள் முகக்கவசங்கள் (மாஸ்க்) அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மார்ச் 31 வரை பொது மக்கள் தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காக்க ஒரே வழி பொது மக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்துவது தான். இதனால் தான் பிரதமர் மோடி நேற்று முன்தினம் மக்கள் கூடுவதை தவிர்க்க அழைப்பு விடுத்தார். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தியேட்டர், வணிக வளாகங்கள் , கேளிக்கை விடுதிகளை இழுத்து மூடப்பட்டுள்ளன. சிறு சிறு மருத்துவ சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு செல்வதை தவிர்க்க பிரதமர் அறிவுறுத்தியிருக்கிறார். மதுரையில் போதிய விழிப்புணர்வு இன்றி ரோடுகளில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. பொது இடங்களில் கூட்டம் காணப்படுகிறது. அரசு, தனியார் மருத்துவமனைகளில் கூட்டம் குறையவில்லை. ஒரு நோயாளியுடன் மூன்று, நான்கு பேர் வருகின்றனர். மதுரை அரசு மருத்துவமனைகளில் நோயாளிக்கு இணையாக உறவினர்கள் கூட்டம் உள்ளது. இது தேவையற்ற பதற்றத்தை உருவாக்குகிறது.
தாமாகவே மக்கள் இதை தவிர்க்க முன்வர வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. மேலும் பணியில் இருக்கும் டாக்டர், நர்ஸ் , பணியாளிகள் மற்றும் காவலாளிகள் கண்டுடிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என சங்குமணி டீன் உத்தரவிட்டுள்ளார். நேற்று முதல் அனைவரும் மாஸ்க் அணிய துவங்கிவிட்டனர். நோயாளிகளும் மாஸ்க் அணிகின்றனர். கொரேனா முன்னெச்சரிக்கையாக அரசு மருத்துவமனைகளில் மட்டும் 23 ஆயிரம் மாஸ்க், 4500 லிட்டர் கிருமி நாசினி இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கையாக மக்கள் தேவையின்றி வெளியில் வந்து கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் வினய் அறிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X