பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சிலவரிகளில்

Added : மார் 21, 2020
Share
Advertisement

கலெக்டரிடம் தி.மு.க., மனுசிவகங்கை: சிவகங்கையில் குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து தவ்ஹித் ஜமாத் சார்பில் நேற்று முன்தினம் தடையை மீறி போராட்டம் நடந்தது. அதில் சிலர் தெப்பக்குளத்திற்குள் இறங்கி தேசியக்கொடியை பிடித்து போராடினர். அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதை ரத்து செய்யக்கோரி தவ்ஹித் ஜமாத், தி.மு.க., கூட்டணி கட்சியினர் கலெக்டர் ஜெயகாந்தனை சந்தித்து மனு அளித்தனர்.

தாய், மகன் மாயம் போலீசில் புகார்திருப்புவனம்; -திருப்புவனம் அம்பலத்தாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் 30, இவருக்கு மதுரை விரகனுாரைச் சேர்ந்த உஷாராணி 28, யுடன் திருமணமாகி கவுதம் 4, என்ற மகன் உள்ளார். கணவன் மனைவி யிடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதுண்டு. கணவனுடன் ஏற்பட்ட தகராறில் உஷாராணி மகன் கவுதமுடன் வீட்டை விட்டு வெளியேறியவர் வீடு
திரும்பவில்லை. பிரெஞ்ச் தினம்காரைக்குடி: மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் பிரெஞ்ச் மொழி தினவிழா கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் தேதி பிரெஞ்ச் மொழி தினமாக கொண்டாடப்படுகிறது. செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு பிரெஞ்சு மொழியினை கடந்த 10 ஆண்டுகளாக பயிற்றுவித்து வருகிறது. பப்ளிக் பள்ளி பிரெஞ்ச் துறை ஆசிரியர்கள் மணிகண்டன்,ஜெயகவுரி ஆகியோர் தங்களுடன் பணிபுரியும் ஆசிரியர் களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். பள்ளி தாளாளர் குமரேசன், துணை தாளாளர் அருண்குமார், முதல்வர் தேன்நிலா வாழ்த்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X