சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உடலை கொண்டு செல்ல தடை கண்டனி மக்கள் போராட்டம்

Added : மார் 21, 2020
Share
Advertisement

சிவகங்கை: கண்டனியில் அனைத்து சமுதாயத்தினரும் வசிக்கின்றனர். இறந்தவர் உடலை ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்ல நெஞ்சத்துாரை சேர்ந்த ஒருவரின் வயல் வழியாக கடந்த 70 ஆண்டுகளாக எடுத்து செல்வது வழக்கம்.ராணுவ வீரர் இளையராஜா உடலை வயல் வழியாக எடுத்து சென்ற போது, அதில் கலந்து கொண்ட அப்போதைய கலெக்டர் மலர்விழி, மயானத்திற்கு பாதை அமைத்து தருவதாக உறுதியளித்தார்.அவர் இடமாறுதலில் சென்ற பின் மயானத்திற்கு வழி பிறக்கவில்லை. கண்டனியை சேர்ந்த காத்தமுத்து மனைவி சாரதா மார்ச் 17ல் இறந்தார். அவரது உடலை வயல் வழியாக எடுத்து செல்ல இயலாதபடி வேலி அமைக்கப்பட்டிருந்தது.இதில் இருதரப்புக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. கண்டனியை சேர்ந்த 16 பேர் மீது இளையாங்குடி போலீசார் தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதை ரத்து செய்யவும், மயானத்திற்கு பாதை அமைத்து தரக்கோரி கண்டனி மக்கள் நேற்று கலெக்டர் ஜெயகாந்தனிடம் மனு அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X