பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா விழிப்புணர்வு முன்மாதிரியான சிவகங்கை போலீசார்

Added : மார் 21, 2020
Share
Advertisement

திருப்புவனம்: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் வேளையில் அதனை தடுக்க சிவகங்கை மாவட்ட போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருவது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா வைரஸ் எளிதில் பரவி விடும், இதனை தடுக்க சுகாதார துறையினர் ஆங்காங்கே கை,, கால்களை கழுவி சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும், 3 மணி நேரத்திற்கு ஒரு முறை கை, கால்களை கழுவ வேண்டும் என பிரசாரம் செய்து வரும் வேளையில் சிவகங்கை மாவட்ட எஸ்.பி., ரோகித்நாதன் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன் வாசல்களிலும் கை கழுவும் திரவம் மற்றும் ஒரு வாளியில் தண்ணீர் வைக்க உத்தரவிட்டுள்ளார். மானாமதுரை டி.எஸ்.பி., கார்த்திகேயன் கூறுகையில், மானாமதுரை கோட்டத்தில் உள்ள மகளிர் காவல்நிலையம் உள்ளிட்ட ஏழு காவல் நிலையங்கள், டி.எஸ்.பி., அலுவலகம் உள்ளிட்டவற்றின் வாசலில் கை கழுவும் திரவம் மற்றும் தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது, போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும் போலீசார், பொதுமக்கள் என அனைவருமே கை,. கால்களை சோப்பு போட்டு கழுவிய பின்தான் வரவேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம் என்றார். மேலும் மாவட்ட எஸ்.பி., இது முறையாக நடத்தப்படுகிறதா என தினசரி காலை மாலை என இருவேளையும் படம் எடுத்து எஸ்.பி.,யின் வாட்ஸ் ஆப் குரூப்பில் பதிவிடவும் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X