பொது செய்தி

தமிழ்நாடு

மாற்று மின்பாதை அமைக்கும் பணி காளையார்கோவிலில் இன்று மின்தடை

Added : மார் 21, 2020
Share
Advertisement

சிவகங்கை: மறவமங்கலத்தில் இருந்து புதிய மின்பாதை அமைப்பதற்காக இன்று காளையார்கோவிலில் மின் வினியோகம் இருக்காது, என காளையார்கோவில் உதவி செயற்பொறியாளர் தெரிவித்தார்.அவர் கூறியதாவது, காளையார்கோவில் துணை மின் நிலையத்திற்கு தற்சமயம் சிவகங்கை துணை மின் நிலைய பாதையில் இருந்து மின் வினியோகம் நடக்கிறது. இதற்கு மாற்றுப்பாதையாக மறவமங்கலத்தில் இருந்து புதிய மின் பாதை அமைக்கும் பணிக்கான இறுதி கட்ட பணி இன்று நடக்கிறது. இன்று காலை 8:00 மணி முதல் பகல் 3:00 மணி வரை காளையார்கோவில் துணை மின் நிலையத்தில் இருந்து மின்வசதி பெறும் காளையார்கோவில், ஆண்டிச்சியூரணி, புளியடிதம்பம், சருகணி, கொல்லாவயல், கொல்லங்குடி, நாட்டரசன்கோட்டை பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது. அவசர பராமரிப்பு பணி என்பதால், பொதுமக்கள் சிரமத்தை தவிர்க்கவேண்டும், என உதவி செயற்பொறியாளர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X