பொது செய்தி

இந்தியா

ராணுவ தளவாட குத்தகை: புது கொள்முதல் கொள்கை

Updated : மார் 21, 2020 | Added : மார் 21, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

புதுடில்லி: மத்திய அரசு, ராணுவ தளவாட கொள்முதல் கொள்கையில், குத்தகைக்கு பெறும் பிரிவை, புதிதாக இணைத்துள்ளது.



latest tamil news



இது குறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய அரசு, ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்வதில், 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து வருகிறது. இத்துடன், உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து, ராணுவ தளவாடங்கள் மற்றும் சாதனங்களை குத்தகைக்கு பெறும் நடைமுறையை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

இது குறித்த அம்சங்கள் அடங்கிய, 'ராணுவ கொள்முதல் நடைமுறை - 2020' என்ற வரைவறிக்கை, ராணுவ வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், இது தொடர்பான கருத்துகளை, ஏப்., 17 வரை தெரிவிக்கலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


latest tamil news




இந்தியாவுக்கு பாதிப்பில்லை



இது குறித்து ராணுவதுறை அமைச்சர் ராஜ்நாத் கூறுகையில், 'சர்வதேச பொருளாதாரத்தின் தாக்கம், அனைத்து நாடுகளையும் பாதிக்கும். ஆனால், ராணுவ தளவாடங்கள் கொள்முதலை பொறுத்தவரை, இந்தியாவிற்கு பாதிப்பு இருக்காது என, நம்புகிறேன். அடுத்த, 2-5 மாதங்களில், சர்வதேச பொருளாதாரம் சீரடைய வாய்ப்புள்ளது.' இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
22-மார்-202022:38:15 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் வாடகை சோபா, இருபது ரூபா, விலைக்கு வாங்கினா முப்பதே ரூபா.. அன்னிக்கே பாடிட்டு போயிட்டாங்க. சாதாரண இயந்திரங்களுக்கே பொதுவாக இரண்டரை அல்லது மூன்று வருடத்தில் முழு விலை தரும் அளவுக்கு தினசரி வாடகை இருக்கும். அதாவது 33 முதல் 40 % வட்டி சதவீதம். அப்புறம் பழைய தளவாடம் நமக்கு சொந்தமும் கிடையாது. நாம் முழு விலை கொடுத்து வாங்கினால் பல நன்மைகள் உண்டு. உதிரி பாகங்களை பகிர்ந்து கொள்வது, பழைய தளவாடத்தை மற்ற நாட்டுக்கு விற்பது என்று.. இந்தியாவில் பொதுவாக பத்து வருஷம் வரை பிளாஸ்டிக் கவரை கூட எடுக்காமல் புதுசுன்னு சொல்லி புளகாங்கிதம் அடைபவர்கள். அவர்களிடம் மூணு வருடம் லீசுக்கு எடுத்து காசை வீணாக்குன்னு சொன்னா? அதிர்ச்சியில் செத்துருவான். ஆனா, அதையே இது ஊரான் வீட்டு காசு, இப்படி லீசுக்கு எடுத்தா உனக்கும் 25% பெர்சென்ட் கமிஷன் தாரேன்ன்னு சொல்லுங்க, அடி தூள்ன்னு சொல்லுவான். அதை தான் இந்த திருட்டு மோசடி கும்பல் செய்கிறது. ஜெட் ஸ்பீடில் கஜானாவை காலியாக்கி கமிஷன் அடிக்கும் திட்டம். இதை தான் கொஞ்சமும் யோசிக்காமல் போலி தேசபதருங்க கைதட்டி ஜிங்கிச்சா போடுறாங்க. யோசிங்க மக்களே, யோசிங்க. செகப்பா வெள்ளை தாடியோட இருக்கிறவன் பொய்யும் சொல்லுவான், போலியா சிரிப்பான், கூடவே நாட்டை வித்துட்டும் போயிடுவான்.
Rate this:
Cancel
21-மார்-202006:45:45 IST Report Abuse
ஆப்பு நல்லதுதான். தளவாடங்களை முழு விலை குடுத்து வாங்கவேண்டாம். வாடகை சைக்கிள் போல எடுத்து ஓட்டிட்டு திரும்பக் குடுத்திடலாம். அப்பப புது சைக்கிளா வாங்கி ஓட்டலாம். என்ன, கொஞ்சம் காசு அதிகமா குடுக்க வேண்டியிருக்கும். சைக்கிள் டேமேஜ் ஆச்சுன்னா, ஃபுல் பணமும் கட்ட வேண்டியிருக்கும்.
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
22-மார்-202022:24:28 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்ஓட்டாத சைக்கிளுக்கு ஓவராயிலிங் பண்ணாளாம், ஓடி போன சக்களத்திக்கு தங்க சங்கிலி வாங்கினாளாம்.. போடப் போகாத சண்டைக்கு தேவையே இல்லாத தளவாடங்கள். லாபமடைவது கமிஷன் அடிக்கும் கட்சியும், லஞ்சம் அடிக்கும் ராணுவ அதிகாரிகளும்,காயலான் கடை பொருளை விற்று சம்பாதிக்கும் வெளிநாட்டு நிறுவனமும், அவர்களின் இந்திய ஏஜெண்டான அம்பானிகளும் தான்....
Rate this:
Cancel
R D Moorthy - bukit batok,சிங்கப்பூர்
21-மார்-202004:58:29 IST Report Abuse
R D Moorthy தேசத்தின் பாதுகாப்பு மிக மிக முக்கியம் இதை செய்யும் அரசுக்கு நாம் துணை நிற்போம் ஜெய்ஹிந்த்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X