அரசியல் செய்தி

தமிழ்நாடு

பொதுமக்களுக்கு கவர்னர் வேண்டுகோள்

Added : மார் 21, 2020
Share
Advertisement

சென்னை : 'கொரோனா வைரஸ் தடுக்க, நாளை நடக்க உள்ள, சுய ஊரடங்கை, அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்' என, தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:உலகம் முழுவதும், பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, பிரதமர் அறிவுறுத்திய வழிமுறைகளை, தமிழக மக்கள் கடைபிடிக்க வேண்டும். அடுத்த சில வாரங்களுக்கு, 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்; தனிமையில் இருக்க பழகிக் கொள்ள வேண்டும்.அனைவரும், 22ம் தேதி, சுய ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும்.

இது தொடர்பாக, அனைத்து தரப்பினரும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழக அரசு எடுத்துள்ள முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. அனைவரும் அரசின் அறிவுரைகளை ஏற்று, ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு, கவர்னர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X