கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' அச்சம் தணியும் வரை போராட்டங்கள் கூடாது: ஐகோர்ட்

Added : மார் 21, 2020
Share
Advertisement

சென்னை : 'கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தணியும் வரை, தமிழகத்தில் போராட்டம், ஊர்வலம், ஆர்ப்பாட்டம் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.போலீஸ் அனுமதியின்றி, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் போராட்டத்தில் ஈடுபடுவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மனுக்கள், நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தன.அரசு தரப்பில், தலைமை குற்றவியல் வழக்கறிஞர், ஏ.நடராஜன், ''மாநில சுகாதார துறை, சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவதை தவிர்க்கும்படியும், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, பொது இடங்களில் கூடுவதை தவிர்க்கும்படி அறிவுரை வழங்கவும், டி.ஜி.பி.,க்கு உத்தரவிடப்பட்டுள்ளது,'' என்றார்.கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருப்பதால், வழக்கு விசாரணையை தள்ளி வைக்கும்படி, வழக்கறிஞர்கள் சிலர் கோரினர்.

சுற்றறிக்கை வெளியிட்டும், சில இடங்களில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடப்பதாக, சில வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:கொரோனா வைரஸ் தொற்று பற்றிய, தற்போதைய நிலை குறித்து, நாங்கள் கவலைப்படுகிறோம். வைரஸ் பரவாமல் தடுக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்துள்ளன. உயர் நீதிமன்றத்திலும் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.தற்போதைய பிரச்னை, போராடுபவர்களின் உரிமை பற்றியது மட்டுமே அல்ல; ஒட்டுமொத்த மக்களின் நலன் பற்றி, அக்கறை கொள்ள வேண்டியுள்ளது. எனவே, மக்கள் நலன் கருதி, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தணியும் வரை, எந்த போராட்டமும், ஆர்ப்பாட்டமும், ஊர்வலங்களும் நடத்தக் கூடாது.இருந்தும், போராட்டங்கள் தொடர்ந்தால், அதை நிறுத்த, அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த உத்தரவு குறிப்பிட்ட குழுக்களுக்கு என்று இல்லாமல், அனைவருக்கும் பொருந்தும். விழாக்கள் எதுவும் நடத்த வேண்டாம் என, அரசு அறிவுரை வழங்கலாம்.திருமண வைபங்களை தள்ளிவைக்க, கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க பரிசீலிக்கும்படி, அரசு வேண்டுகோள் விடுக்கலாம்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை, ஏப்., ௨௧க்கு தள்ளி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X