தமிழ்நாடு

கண்மாயில் கலக்குது கழிவுநீர் யார்தான் பொறுப்பு மெத்தனத்தால் விவசாயம் பாழ்

Added : மார் 21, 2020
Share
Advertisement

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டத்தில் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அருகாமையில் உள்ள நீரோடைகள் வழியாக கண்மாய்களில் கலக்கப் பட்டு வருகிறது. இதற்குமாற்று தீர்வு ஏற்படுத்துவதை பற்றி அரசு முயற்சி மேற்கொள்ளாததால் விவசாயம், குடிநீர் ஆதாரங்கள்சிக்கலுக்கு உள்ளாகின்றன.

மாவட்டத்தில் புதிதாக ஏற்படுத்தப் படும் குடியிருப்பு களோடு ஏற்கனவே உள்ளவற்றிற்கும் தகுந்த கழிவு நீர் வடிகால் அமைப்பு அமைக்கப்படுவது அவசியம். இதற்கான முயற்சி எடுக்காத உள்ளாட்சி நிர்வாகங்கள் அருகிலுள்ள நீர்நிலைகளுக்கு திருப்பி விட்டுகடமையை முடித்து கொள்கின்றன. இதை தடுக்க பல்வேறு சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியும் நடவடிக்கை என்பது இல்லை.

வறண்ட பூமிகளில் விவசாயத்திற்கு ஆதாரமாக இருக்க ஏற்படுத்தப்பட்டதே கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வரும் இவற்றை குடியிருப்புகளி ன் கழிவு நீர் கலப்பால் கழிவு நீர் தேக்கமாக மாறி விடுகிறது. இதனால்வருங்கால சந்ததியினரின் வாழ்வாதாரமும் பாதிப்பிற்கு உள்ளாகின்றன. ராஜபாளையம் ஒன்றியத்தில் 80 க்கு மேற்பட்ட குளங்கள், நீர்பிடிப்பு நிலைகள் உள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயநிலங்கள் பயனடைகின்றன.

நெல், வாழை, கரும்பு, பருத்தி உள்ளிட்ட பயிர்கள் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. இதில் கிணற்று நீரை விட குளத்துநீரை சார்ந்தே வழி வழியாக விவசாயம் நடைபெற்று வருகிறது. விவசாயிகளின் உயிர் நாதமாக இருக்கும் கண்மாய் நீர் நிலைகளில் தற்போது கழிவு நீர் கலக்க நீரின் தன்மையே மாறி வருகிறது.

பல ஊராட்சிகளில் குப்பை கிடங்கு இல்லாததால் சேகரமாகும் குப்பை கண்மாய், ஆறுகளில் கொட்டுகின்றனர். இதனால் நிலத்தடி நீர் கெட்டு விளைநிலம் விவசாயத்திற்கு தகுதியற்ற நிலங்களாக மாறும் அவலம் தொடர்கிறது.

நிறம் மாறியதால் வாடும் பயிர்கள்

பல தலைமுறைகளாக உயிர் வளர்ச்சிக்கு ஆதாரமாக விளங்கி வந்த கண்மாய்கள் தற்போது ஆலைகள் மற்றும் குடியிருப்புகழிவுகளால் பாழாகி வருகிறது. ராஜபாளையம் அரசு மருத்துவமனை அருகில் உள்ள அலப்பசேரி கண்மாய் யொட்டி உள்ள தனியார் தொழிற்சாலை கழிவுகலப்பால்விவசாய நிலங்கள் பாழாகிறது. கிணற்று நீர் புதிய நிறத்துடன் மாறி பயிர்கள் வாடுகின்றன. கண்மாய் நீரை அள்ளி குடித்தும் குளித்தும், உபயோகத்திற்கும் பயன்படுத்திய நிலை மாறி தற்போது கால்களை நனைத்தாலே ரசாயன நெடி வீசும் நிலைஏற்படுகிறது. இந்நிலை மாற இதில் கலக்கும் கழிவு நீரினை சுத்திகரிப்பு செய்யமாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும்.- சுப்பிரமணியம், விவசாயி, ராஜபாளையம்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X