பொது செய்தி

தமிழ்நாடு

பெரியமாரியம்மன் ேகாயில் தரிசனத்துக்கு தடை

Added : மார் 21, 2020
Share
Advertisement

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய மாரியம்மன் கோயிலில் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கபட் டதால் ஏமாற்றமடைந்த பக்தர்கள் கோயில் வாசலை வணங்கி சென்றனர்.இக்கோயிலில் பூக்குழித் திருவிழா நடந்து வந்தநிலையில் கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக திருவிழாவிற்கு மாவட்டநிர்வாகம் தடை செய்திருந்தது. மனவேதனையடைந்த பக்தர்கள் கோயிலில் மட்டும் அம்மனை தரிசனம் செய்தனர். இந்நிலையில் மார்ச் 31 வரை கோயிலில் சாமிதரிசனம் செய்யவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.இதுகுறித்த அறிவிப்புகோயிலின் முன்வாசலில் வைக்கபட்டிருந்தது. நேற்று மாலை கோயிலுக்கு வந்தவர்கள் பிரதான வாசல் பூட்டபட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அருகிலிருந்து அறிவிப்பை படித்து மனவேதனை யடைந்தனர்.தாங்கள் கொண்டு வந்திருந்த பூ, சூடம், நெய்விளக்குகளை கோயில் வாசலில் சமர்பித்து அம்மனை வணங்கி சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X