பொது செய்தி

தமிழ்நாடு

ராணுவ போலீசில் அருப்புக்கோட்டை மாணவி என்.சி.சி., சான்றால் எழுத்து தேர்வின்றி தேர்வு

Added : மார் 21, 2020
Share
Advertisement

அருப்புக்கோட்டை ; பெண்கள் இல்லாத துறைகளே இல்லை என்ற அளவிற்கு அனைத்திலும் பெண்கள் கொடி கட்டி பறக்கின்றனர். அந்தந்த துறைகளில் தங்கள் முத்திரையை பதித்தும் வருகின்றனர். விண்வெளி வரை போய் வந்து விட்டனர். இந்தியாவில் முப்படைகளிலும் பெண்கள் கால் பதித்து விட்டனர். இந்திய ராணுவ தரைப்படையில் சிப்பாய் ஆக இதுவரை ஆண்கள் மட்டும் சேர்க்கப்பட்ட நிலையில் சிப்பாய் பணியில் பெண்களையும் சேர்த்து கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது. இதற்கான கல்வி தகுதி 10ம் வகுப்பு , வயது 17 அரை முதல் 21 வரை என தீர்மானிக்கப்பட்டது. பெங்களூரு, ஷில்லாங், அம்பாலா, லக்னோ, ஜபல்பூர் ஆகிய 5 இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டது. உடற் தகுதி தேர்வு மற்றும் எழுத்து தேர்வு நடத்தப்பட்டு தேர்வானவர்களுக்கு பெங்களூருவில் ராணுவ பயிற்சியும் அளிக்கப்பட்டது. இந்தியா முழுவதும் 100 பெண்கள் தேர்வு செய்யப்பட்டதில் தமிழ்நாட்டை சேர்ந்த4 பெண்களில் அருப்புக்கோட்டை காலப்பெருமாள்பட்டி கற்பக லட்சுமி ஒருவர். இவரது பெற்றோர் கூலி தொழிலாளிகள்.கற்பகலட்சுமி கூறுகையில், '' நான் ஸ்ரீ சவுடாம்பிகா இன்ஜி.,கல்லுாரியில் படிக்கும் போதே என்.சி.சி., மீது இருந்த ஆர்வத்தால் அதில் சேர்ந்தேன். ராணுவத்தில் சேர்ந்து எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இதற்கு வாய்ப்பாக என்.சி.சி., அமைந்தது. என்.சி.சி., யில் 'பி' கிரேடு மற்றும் 'சி' கிரேடு சான்றிதழ்கள் வாங்கி உள்ளேன். இதனால் எழுத்து தேர்வு எழுதாமமே மகளிர் ராணுவ போலீஸ் பிரிவில் பணி கிடைத்தது. எங்கள் கல்லுாரியில் என்.சி.சி. க்கு அதிகமுக்கியதுவம் தருகின்றனர். இதனால் சிறப்பான பயிற்சியும் ராணுவத்தில் வேலை வாய்ப்பும் கிடைத்து ,''என்றார்.மாணவியை விருதுநகர் 28 தமிழ்நாடு பட்டாலியன் கமாண்டிங் ஆபிசர் கர்னல் முருகேசன் மற்றும் கல்லுாரி என்.சி.சி. அதிகாரி கணேசன், கல்லுாரி நிர்வாகம் பாராட்டியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X