பொது செய்தி

தமிழ்நாடு

ரத்து! குறைதீர் கூட்டங்கள் மார்ச் 31 வரை ... கொரோனா தடுப்பு நடவடிக்கையால்

Added : மார் 21, 2020
Share
Advertisement

ராமநாதபுரம் : கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து குறை தீர்க்கும் கூட்டங்களும் மார்ச் 31 வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் திங்கட்கிழமை தோறும் நடத்தப்படும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், கிராமப்புறங்களில் நடத்தப்படும் மக்கள் தொடர்பு முகாம்கள், வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் அம்மா திட்ட முகாம்கள், கலெக்டர் அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகங்களில் செயல் பட்டு வரும் ஆதார் மையம் மற்றும் பொது சேவை மையங்கள் போன்றவை கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை காரணமாக பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க மார்ச் 31 வரை ரத்து செய்யப்படுகிறது.

எனவே பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்நடைபெறும் அரங்கில் வைக்கப்பட்டு ள்ள பெட்டி யில் போட வேண்டும். அவசர கோரிக்கை இருப்பின் அதுகுறித்த விவரங்களை collrrmd@nic.in மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது 04567-230056 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம், என கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்து உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X