பொது செய்தி

தமிழ்நாடு

முத்தாலம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

Added : மார் 21, 2020
Share
Advertisement

பரமக்குடி : பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

இக்கோயிலில் நேற்று பூச்சொரிதல் விழா நடக்க இருந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக விழா ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் அம்மனுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பாலபிஷேகம் செய்வது வழக்கம். இதையடுத்து, நேற்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பின்னர், முத்தாலம்மன் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து தீபாராதனைகள் நடந்து பிரசாதம் வழங்கப்பட்டது. ஆயிரவைசிய சபை தலைவர் போஸ் மற்றும் கோயில் டிரஸ்ட்டிகள் உள்ளிட்ட சபை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X