சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனியார் பஸ் விற்பனை மோசடி: தந்தை, மகன் மீது வழக்கு

Added : மார் 21, 2020
Share
Advertisement

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் தனியார் பஸ்சை விற்று மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் தந்தை, மகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

ராமநாதபுரம் பட்டிணம் காத்தான் பகுதியை சேர்ந்தவர் மெய் முருகன் 31. இவர் திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த புகழேந்தியிடம் பஸ் வாங்க வேண்டும் என கூறினார். அப்போது நிதி நிறுவனம் நடத்தி வரும் சுப்பிரமணியன் என்பவரிடம் பணம் பெற்று பஸ் வாங்கி கமுதி-பெருநாழி வழித்தடத்தில் பஸ் இயக்கி வருவதாக புகழேந்தி தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் அந்த வழித்தடத்திற்கான உரிமையுடன் ரூ.60 லட்சத்திற்கு வாங்க மெய்முருகன் ஒப்புக் கொண்டார்.

முதற் கட்டமாக ரூ.9.45 லட்சத்தை புகழேந்தி மகன் சதீஷ்குமாருக்கு வங்கி பண பரிவர்தனை மூலமாக வழங்கியுள்ளனர். பின்னர் நேரடியாக ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் புகழேந்தியிடம்ரூ.15.5 லட்சத்தை கொடுத்து உள்ளார். இந்நிலையில், நிதி நிறுவனத்திற்கான பணத்தை புகழேந்தி செலுத்தாதால் பஸ்சை நிதி நிறுவத்தினர் கைப் பற்றினர். இதனை தொடர்ந்து பணத்தை திருப்பி தருவதாக உறுதிமொழி பத்திரத்தை புகழேந்தி எழுதி கொடுத்தும் பணத்தை திருப்பி வழங்கவில்லை. இது குறித்து மெய் முருகன் எஸ்.பி., வருண்குமாரிடம் புகார் மனு அளித்தார். அவரின் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X