பொது செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல் மகளிர் குழுவினர் 'பேஸ் மாஸ்க்' தயாரிப்பில் 'பிசி'

Added : மார் 21, 2020
Share
Advertisement

திண்டுக்கல் : 'கொரோனா' வைரஸ் தாக்கத்தால், திண்டுக்கல்லில் மகளிர் சுய உதவிக்குழுவினர் மூலம் 'பேஸ் மாஸ்க்' (முகமூடி) தயாரிக்கும் பணி மும்முரமாக நடக்கிறது. அண்டை நாடான சீனாவில் துவங்கி, இந்தியா உட்பட உலக நாடுகளை 'கொரோனா' வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இதனால் இந்தியா முழுவதும், கொரானாவை தடுக்க 'மாஸ்க்' அணியுங்கள், சானிடைசர் உபயோகிங்கள் என அறிவுறுத்தப்படுவதால், அவை இல்லாமல் பலர் வெளியே வருவதில்லை.

ஒரு நாள் பயன்படுத்திய மாஸ்க்கை மறுநாள் பயன்படுத்தக் கூடாது என்பதால் அதன் விற்பனை உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் தேவை அதிகரித்து, மாஸ்க்கிற்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. சில இடங்களில் ரூ.10 க்கு விற்ற மாஸ்க் ரூ.30 வரை விற்பனையாகிறது. திண்டுக்கல்லில் 'பேஸ் மாஸ்க்'கிற்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதை சமாளிக்க, அன்னை இந்திரா மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் 'பேஸ் மாஸ்க்'தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். எக்ஸ்போர்ட் காட்டன் மற்றும் பனியன் கிளாத்தில் மாஸ்க் தயாரிக்கின்றனர். ஒரு மாஸ்க் ரூ.10 க்கு விற்கப்படுகிறது.தேவைப்படுவோர் திண்டுக்கல் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் வாங்கலாம். மொத்தமாக ஆர்டர் செய்தும் கொடுக்கின்றனர். இதேபோல் கலெக்டர் அறிவுறுத்தலின்படி, குஜிலியம்பாறை, சீவல்சரகில் உள்ள தனியார் தொழிற்சாலையிலும் தேவையான அளவு பேஸ் மாஸ்க் தயாரிக்கின்றனர்.சுய உதவிக்குழு பெண்கள் கூறியது: கடைகளில் வாங்கும் மாஸ்க்கை ஒரு நாள் மட்டுமே பயன்படுத்த முடியும். நாங்கள் தயாரிக்கும் மாஸ்கை துவைத்து எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். கொரோனா பாதிக்காமல் இருக்க மாஸ்க் அணிவது அவசியமில்லை. வெளியே செல்கையில் மாசு தொல்லையில் இருந்து தப்பிக்கவும் பயன்படுத்தலாம், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X