பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா எதிரொலி கோயில் விழாக்களுக்கு அனுமதி மறுப்பு

Added : மார் 21, 2020
Share
Advertisement

நிலக்கோட்டை, : நிலக்கோட்டை தாலுகாவில் கொரோனா தொற்று எதிரொலியால் மக்கள் அதிகமாக கூடும் திருவிழாக்களுக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.


கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மக்கள் கூடுவதை தவிர்ப்பதற்காக பள்ளி, கல்லுாரிகளுக்கு அரசு மார்ச் 31 வ ரை விடுமுறை கொடுத்து அனைவரையும் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தி உள்ளது. பிரதமர் மோடியும் நாளைய (மார்ச் 22) தினத்தை மக்கள் ஊரடங்கு தினமாக அறிவித்து காலை 7:00 முதல் இரவு 9:00 மணி வரை பொதுமக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி, வீட்டைவிட்டு வெளியேறாமல் இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்கள் கூடுவதற்கு அடுத்தடுத்து தடை விதித்து தமிழக அரசும் உத்தரவிட்டு வருகிறது. இதன் எதிரொலியாக ஏற்கனவே (மார்ச் 15) சாமி சாட்டப்பட்டு ஏப்ரல் 5ம் தேதி முதல் நடக்கவிருந்த நிலக்கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவை நிறுத்த வேண்டும் என, போலீசார் கேட்டுக் கொண்டதற்கிணங்க நாடார் உறவின்முறை, திருவிழா ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. விளாம்பட்டி முத்தாலம்மன், 5 கிராம கோயில் திருவிழாவான நரியூத்து, உச்சணம்பட்டி, பாலம்பட்டி, மாவுத்தன்பட்டி, அதேபோல் வத்தலக்குண்டு தெற்கு தெருவில் திருவிழாவுக்காக அனுமதி கேட்கப்பட்டது. அதற்கும் போலீசார் அனுமதிக்கவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X