சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒட்டன்சத்திரம் ஏ.பி.பி., நகரில் கழிவுநீர் செல்ல வழியில்லை

Added : மார் 21, 2020
Share
Advertisement

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் நகராட்சி, ஏ.பி.பி.நகர் வடக்குப் பகுதியில் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி இருப்பதால் சுகாதாரம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

ஒட்டன்சத்திரம் ஏ.பி.பி., நகர் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் சேகரமாகும் கழிவுநீர், வடக்கு பகுதியில் பழநிக் கவுண்டன்புதுார் ரோட்டை தாண்டி சிற்றோடையில் கலந்து வெளியேறியது. சில மாதங்களுக்கு முன் ரோட்டை தாண்டி செல்லும் பகுதி பட்டா நிலத்திற்குள் வருவதாக கூறி, நில உரிமையாளர் சாக்கடை வெளியேறிய பகுதியில் மண்ணை போட்டு அடைத்து விட்டார். இதனால் ரோட்டுக்கு தெற்கு பகுதியில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இந்த ரோட்டில்தான் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. கழிவுநீர் நீண்ட நாட்களாக தேங்கி இருப்பதால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுத் தொல்லையும் அதிகரித்துள்ளது. இதனால் சுகாதாரம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இது குறித்து ஒட்டன்சத்திரம் நகராட்சியில் மனு கொடுத்துள்ளனர்.

ஏ.பி.பி.நகர் குடியிருப்போர் நலச் சங்க உறுப்பினர் பழனிச்சாமி கூறுகையில், ''நோய் தொற்ற அதிக வாய்ப்புள்ளதால், ஒட்டன்சத்திரம் நகராட்சி நிர்வாகம் இப்பகுதியில் கழிவுநீர் தேங்காமல் செல்ல வழிவகை காண வேண்டும்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X