பொது செய்தி

தமிழ்நாடு

குறைதீர் கூட்டங்கள் ரத்து: கலெக்டர்

Added : மார் 21, 2020
Share
Advertisement

திண்டுக்கல் : கொரோனா முன்னெச்சரிக்கையாக, திண்டுக்கல்லில் அனைத்து குறைதீர் கூட்டங்களும் மார்ச் 31 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது என, கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார்.

கொரோனா பரவலை தடுக்க, தமிழகத்தில் அனைத்து கல்வி நிறுவனங்கள், அங்கன்வாடி மையங்கள், சுற்றுலாத்தலங்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மார்ச் 31 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதே போல், பொதுமக்கள் கூட்டம் கூடவோ, விழாக்கள் நடத்தவோ வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. திண்டுக்கல்லில் கல்வி நிறுவனங்கள், தியேட்டர்கள், சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, வழக்கமாக நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டம், விவசாயிகள் கூட்டம், மக்கள் தொடர்பு மற்றும் அம்மா திட்ட முகாம் உட்பட அனைத்து கூட்டங்களும் மார்ச் 31 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்கள் அவசரமான கோரிக்கைகள் குறித்த விவரங்களை collrdgl@nic.in இமெயில் அல்லது 75988 66000 எண்ணிற்கு வாட்ஸ் ஆப்பில் தகவல் தெரிவிக்கலாம். மேலும் 0451-1077 கட்டணமில்லா தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம், என தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X