சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பயணியர் நிழற்கூடம் இல்லாமல் அய்யலூரில் மக்கள் பரிதவிப்பு

Added : மார் 21, 2020
Share
Advertisement

வடமதுரை : அய்யலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் நெடுஞ்சாலையில் பயணியர் நிழற்கூடம் அமைக்க வேண்டும்.திண்டுக்கல்- திருச்சி நெடுஞ்சாலையில் அய்யலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பிரிவு பஸ் நிறுத்தம் உள்ளது.

இதன் அருகே வண்டி கருப்பணசுவாமி கோயில், கலை அறிவியல் கல்லுாரி உள்ளன. திருச்சி, திண்டுக்கல் மாவட்ட பக்தர்கள், மாணவர்கள், நோயாளிகள் இந்த நிறுத்தத்தை பயன்படுத்துகின்றனர். நான்கு வழிச்சாலை அமைத்தபோது, இங்கிருந்த நிழற்கூடம் அகற்றப்பட்டது. பின்னர் மீண்டும் அமைக்கப்படாமல் உள்ளதால் வெயில், மழை நேரத்தில் ஒதுங்க இடமின்றி பயணிகள் தவிக்கின்றனர்.

இங்கு நிழற்கூடம் அமைத்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளுக்காக பல கிராம மக்கள் ரோடு மறியல் போராட்டம் அறிவித்தனர். இதற்காக நடந்த சமாதான கூட்டத்தில், 'நெடுஞ்சாலை திட்ட இயக்குனர் அனுமதி பெற்று உடனே நிழற்கூடம் அமைப்பது என முடிவானது. ஆனால் ஆண்டுகள் சில கடந்தும் நிழற்கூடம் அமைக்கவில்லை. இந்த நிறுத்தத்தின் முக்கியத்துவம் கருதி நிழற்கூடம் அமைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X