பொது செய்தி

இந்தியா

'ஏர் இந்தியா'வில் முதலீடு வெளிநாடுவாழ் இந்தியருக்கு சலுகை

Updated : மார் 21, 2020 | Added : மார் 21, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement

புதுடில்லி : ஏர் இந்தியா நிறுவனத்தில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலீடு செய்வதற்கான வரம்பு, 100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.



latest tamil news



அமைச்சரவைக் குழு கூட்டத்தில், ஏர் இந்தியா நிறுவனத்தின், 100 சதவீத பங்குகளை வாங்க, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அனுமதி அளிப்பது என, முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, விமான சேவை நிறுவனங்களில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலீடு செய்வதற்கான வரம்பு, 49 சதவீதமாக உள்ளது. இது குறித்து, மத்திய தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தக துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஏர் இந்தியா நிறுவனத்தில், அன்னிய விமான நிறுவனங்கள் உள்ளிட்ட, அன்னிய முதலீட்டாளர்கள் செய்யும் முதலீடு, 49 சதவீதத்துக்கு அதிகமாக இருக்கக்கூடாது. இருப்பினும், இந்திய குடியுரிமை கொண்ட, வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், ஏர் இந்தியாவில், 100 சதவீதம் முதலீடு செய்யலாம்.


latest tamil news



வெளிநாட்டு வாழ் இந்தியர்களும், இந்திய முதலீட்டாளர்களாகவே கருதப்படுவர். எனவே, அவர்கள், 100 சதவீத முதலீடை மேற்கொள்ளலாம். இதற்கான அமைச்சரவை முடிவு, கடந்த, 4ம் தேதி எடுக்கப்பட்டது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-மார்-202016:01:59 IST Report Abuse
ஆப்பு கைலாஷ் நாட்டு அதிபரிடம் நிறைய இருக்காம்.
Rate this:
Cancel
magan - london,யுனைடெட் கிங்டம்
21-மார்-202015:32:06 IST Report Abuse
magan வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்றால்
Rate this:
Cancel
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
21-மார்-202015:12:43 IST Report Abuse
Ab Cd லாபத்தில் இயங்கும் நிறுவனங்களை அம்பானிக்கு அதானிக்கு கொடுங்கள். நஷ்டத்தில் போகும் நிறுவனங்களை அரசு நிறுவனங்களுக்கும், NRI க்கும், போது மக்களுக்கும் கொடுங்கள்
Rate this:
Jaya Ram - madurai,இந்தியா
21-மார்-202016:04:19 IST Report Abuse
Jaya Ramஅதுவும் அந்த லாபத்தில் இயங்கும் நிறுவங்களை கையகப்படுத்தது அவர்களுக்கு அம்பானி , அதானி போன்றோருக்கு வங்கி கடன் வேறு உடனடியாக வழங்குவர் இது பாஜகவும் காங்கிரஸும் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X