பொது செய்தி

இந்தியா

விமானங்கள் ரத்து : மாறியது பார்லி அலுவல் நேரம்

Updated : மார் 21, 2020 | Added : மார் 21, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

புதுடில்லி: கொரோனா பரவல் பிரச்னையால் வரும் 23 மற்றும் 30 தேதிகளில் பார்லி அலுவல் நேரம் மாற்றப்பட்டுள்ளது.



latest tamil news



கொரோனா பரவல் பிரச்னையால், உள்நாட்டு விமானங்கள் பல ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், எம்.பி.,க்களால், பார்லி.,க்கு குறித்த நேரத்தில் வர முடியாத சூழ்நிலையில், வரும், 23 மற்றும் 30 ஆகிய இரு திங்கட்கிழமைகளில் மட்டும், பார்லி.,யின் அலுவல் நேரம் மாற்றிஅமைக்கப்பட்டுள்ளது.

பார்லி.,யில், பட்ஜெட் கூட்டத்தொடரின், இரண்டாம் அமர்வு, ஏப்ரல், 3 வரை நடக்கவிருக்கிறது. ஆனால், கொரோனா பரவல் பீதியால், எம்.பி.,க்கள் பலரும், கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்துக் கொள்ள வேண்டுமென கோரி வருகின்றனர்.குழப்பம் ஆனால், பிரதமர் மோடியோ, ''திட்டமிட்டபடி பார்லி., கூட்டத்தொடர் நடைபெறும்,'' என, உறுதியாக தெரிவித்து விட்டார். இதையடுத்து, பார்வையாளர்கள் வருகை நிறுத்தப்பட்டு, அமைச்சர்கள், எம்.பி.,க்கள், பத்திரிகையாளர்கள் மட்டுமே, பார்லி.,க்கு வந்து போகின்றனர்.

இந்நிலையில், கொரோனா பிரச்னையால், நேற்று முன்தினத்திலிருந்து, உள்நாட்டு விமானங்கள் பல ரத்து செய்யப்பட்டு, இயக்கப்படும் சொற்ப விமானங்களின் நேரமும், சூழலுக்கு ஏற்ற மாதிரி மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.இதனால், டில்லிக்கு, திட்டமிட்டபடி எந்த விமானமும் வர முடியாமல் குழப்பம் நிலவுகிறது. இதை, எம்.பி.,க்கள் சுட்டிக்காட்டி, தங்கள் வாதத்தை தீவிரப்படுத்தினர். லோக்சபா சபாநாயகர், ஓம் பிர்லா தலைமையில், நேற்று நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், இவ்விவகாரம் பேசப்பட்டது. அனைத்து கட்சி எம்.பி.,க்களும், தங்களது சிரமங்களை கூறினர்.


latest tamil news



சிக்கல் எழலாம்
வார விடுமுறை நாட்களான, சனி மற்றும் ஞாயிறில் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டு, மீண்டும் திங்கள் கிழமையில், டில்லிக்கு, விமானம் மூலம், காலை, 11:00 மணிக்கு முன்பாக, வர முடியாத நிலை, ஏற்பட்டிருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இதையடுத்து, வரும், 23 மற்றும் 30 ஆகிய இரு திங்கட்கிழமைகளில் மட்டும், பார்லி., அலுவல் நேரம், காலை,11:00 மணி என்பது மாற்றப்பட்டு, இரு சபைகளும், மதியம், 2:00 மணிக்கு கூடும் என, நேற்று அறிவிக்கப்பட்டது.ஆனால், வரும் நாட்களில், கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் அதிகமாகி, சூழ்நிலை மாறினால், பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதுமாக நடைபெறுவதில், சிக்கல் எழலாம் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.

-நமது டில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
21-மார்-202020:25:12 IST Report Abuse
madhavan rajan எப்படி இருந்தாலும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கூச்சல் குழப்பம் ஏற்படுத்தி சபாநாயகர் மதியம் இரண்டு மணிவரை ஒத்திவைப்பார். இப்போது எதிர்க்கட்சிகள் மதியம் இரண்டு மணிக்குமேல் தங்கள் கூச்சல் குழப்பத்தை ஆரம்பிக்கலாம். எப்படியோ அலவன்சு மற்றும் சகாய விலையில் உணவுக்கு பஞ்சமில்லை. என்ஜாய்.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
21-மார்-202010:57:54 IST Report Abuse
Natarajan Ramanathan சொந்த ஊருக்கு வந்து என்னத்த செய்ய போறாங்க? கூட்டத்தொடர் முடியும்வரை அங்கேயே இருக்கலாமே? ஓசி பயணம் செய்யாமல் இருக்க முடியவில்லையோ?
Rate this:
வல்வில் ஓரி - கலைஞர் சமாதியில் தயிர் வடை ,இந்தியா
21-மார்-202012:44:17 IST Report Abuse
வல்வில் ஓரி ஒரு நாள் சுய 144 போட மோடி மார்ச் 31 வரை பார்லிமென்ட் தள்ளி வைக்கலாமே...
Rate this:
Cancel
Sri,India - India,இந்தியா
21-மார்-202010:56:03 IST Report Abuse
 Sri,India அனால் டாஸ்மாக் கடைகள் மட்டும் வழக்கம் போல செயல்பட்டு கஜானாவை நிரப்பி வருகிறது . அரசியல்வாதிகள் பாட்டில் கமிஷன் கொரோனவை விட வலிமையானது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X