பொது செய்தி

தமிழ்நாடு

மோடியின் 'மக்கள் ஊரடங்கு': வரவேற்கும் மக்கள்

Added : மார் 21, 2020
Share
Advertisement

''கொரோனாவை தடுக்க பிரதமர் மோடி விடுத்துள்ள மக்கள் ஊரடங்கு அழைப்பை முழுமையாக நிறைவேற்றுவோம்'' என விருதுநகர் மாவட்ட மக்கள் மக்கள் நெகிழ்ச்சி கருத்தை தெரிவித்துள்ளனர்.

உலகை நிலைகுலைய செய்துள்ள கொரோனாவின் ருத்தர தாண்டவத்தை கட்டுப்படுத்த இதுவரை மருந்து இல்லை. எனினும் ஒவ்வொரு தனிமனிதனும் தனக்கான சமூகப்பொறுப்பை உணர்ந்து அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைத்தால் இதை வெல்லலாம். மக்கள் தங்களை தனிமைப்படுத்துவது ஒன்றே கொரோனாவிற்கான தற்காப்பு ஆயுதம். இதைத்தான் நேற்று முன்தினம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் வேண்டுகோளாக வைத்தார்.'போரை விட கொடூரமான இக்கொரோனா பாதிப்பை தடுக்க மக்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். சரியான தீர்வு இல்லாத நிலையில் தங்களை தனிமைப்படுத்துவது தான் ஒரே வழி. நம்மையும், பிறரையும் பாதுகாக்க இதை மேற்கொள்ள வேண்டும்' என கேட்டுக்கொண்ட மோடி, 130 கோடி இந்தியர்களுக்கும் மார்ச் 22ல் மக்கள் ஊரடங்கிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.


இது குறித்து மக்கள் தெரிவித்த கருத்துகள்:


எளிதில் கட்டுப்படுத்தி விடலாம்
ஜெயக்கொடி பாலசுப்பிரமணியன், வழக்கறிஞர், சிவகாசி: சீனாவில் துவங்கிய கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. அதற்கு மிக முக்கிய காரணம் பொதுமக்களின் ஒத்துழைப்புதான். கொரோனா வைரஸ் 14 நாட்கள்தான் உயிரோடு இருக்கும் என தெரிய வருகிறது. எனவேதான் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கூட்டம் சேர கூடாது என பல்வேறு வழிமுறைகளை அரசு வலியுறுத்தி வருகிறது. ஞாயிறு ஊரடங்கு உத்தரவு என மோடி அறிவித்துள்ளார். இதற்கு காரணம் தனி மனித கட்டுபாட்டினை உருவாக்குவது தான் நோக்கம். அன்று ஒருநாள் இப்படி பழகி விட்டால் வருகின்ற கடினமான நாட்களையும் நாம் பழகி கொள்ளலாம். நாளை மட்டுமல்லாமல் வருப்போகிற 10 நாட்களும் இதேபோல் நாம் கட்டுப்பாட்டுடன் தனியாக இருக்க பழகி விட்டால் கொரோனாவை எளிதில் கட்டுப்படுத்தி விடலாம்.

வருமுன் காப்பாற்றி உள்ளார்

கீதாஞ்சலி, குடும்பத்தலைவி, ஸ்ரீவில்லிபுத்துார்: வருமுன் காப்பதே நோய் குணப்படுத்தலின் முன்னோடி. அதன்படி நம் பிரதமரின் பேச்சு மக்களுக்கு ஒரு ஊக்க சக்தியாக இருந்தது. இந்திய மக்கள் ஒவ்வொருவரையும்காக்கவேண்டுமென்பது அவரின் பேச்சின் வெளிப்பாட்டை உணர்ந்தோம். நம்மை காப்பவர்களின் பணியை பாராட்டுவது மிகசிறப்பு. எவ்வளவு பொருளாதார இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை.ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாகூடாது என பேசியது இந்திய மக்களை காப்பதின் அவசியத்தை ஆணித்தரமாக உணர்த்தியது.அதை நாம் ஒவ்வொருவரும் காப்போம். நோயின்றி வாழ்வோம். தாயகம் காப்போம்.

அரசுடன் ஒத்துழைப்போம்

சரவண செல்வன், ஆசிரியர், ராஜபாளையம்: கொரோனா வைரஸ் வேகமாக பரவக்கூடிய சூழலில் உலகம் மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது. உலகபேரழிவு ஏற்பட்டுள்ள நிலையில் வைரஸ் பரவுவதை தடுப்பதில் மெத்தனமாக இருக்கக்கூடாது என்ற நோக்கில், பிரதமரின் சுய எச்சரிக்கையை செயல்படுத்தும் விதமாகவும், மக்களுக்கான விழிப்புணர்வாக இதை ஒவ்வொருவரும் கருத வேண்டும். தான் தோன்றித்தனமாக தனி மனித சுதந்திரம் எனும் பெயரில் சுற்றி திரிவதை விட்டு அரசுடன் ஒத்துழைப்போம். இதன் ஒருபகுதியாக நாளை அறிவித்துள்ள சுய ஊரடங்கு ஒத்துழைப்பை பின்பற்றி நோய் பாதிப்பிலிருந்து நம்மை காப்போம்.

ஒற்றுமையே வலிமை
ஜி.கோபாலகிருஷ்ணமூர்த்தி, பேராசிரியர், ஸ்ரீகிருஷ்ணசாமி கலை கல்லுாரி, சாத்துார்: தேசத்தின் விடுதலை போராட்டம் நடந்த போது நம்மில் இருந்த ஒற்றுமை உணர்வையும் எழுச்சியையும் மீண்டும் உலகிற்கு உணர்த்த நல்லதொரு சந்தர்ப்பம். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக பொருளாதாரம் மட்டுமின்றி நமது நாட்டின் பொருளா தாரத்திற்கும் மிகப் பெரிய சவால் ஏற்பட்டுள்ளது. இதை பிரதமர் மோடி தனது உரையின் மூலம் வெளிப்படுத்தி உள்ளார். நாடு இக்கட்டான நிலையில் உள்ளது. தனி மனிதர் தன்னை தானே தனிமை படுத்திக் கொண்டு நோய் பரவலை தடுக்க வேண்டும். மனிதர்களிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு பரவுவதால் நோய் பரவலை தடுக்க ஆழ்ந்து யோசித்து பிரதமர் இந்த ஊராடங்கு உத்திரவை பிறப்பித்துள்ளார். கொரோனா தேசிய பேரிடரை பிரதமர் தலைமையில் எதிர்கொள்வோம்.

வெற்றிபெறுவோம்
அப்துல் அர்ஷத், சமூக சிந்தனையாளர், காரியாபட்டி: கொடிய நோய் பரவி வருவதால் மக்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. அரசு அறிவிக்கும் உத்தரவுகளை முறையாக கடைபிடிக்க வேண்டியது நமது கடமை. ஒரு நாள் வெளியில் செல்லாமல் இருந்தால் நோய் தொற்று பரவுவதை தடுக்க முடியும் என முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது நல்ல விஷயம் தான். இதில் எந்த பாகுபாடு இல்லாமல் நாம் அனைவரும் அரசு உத்தரவை பின்பற்ற வேண்டும். இது போன்ற நெருக்கடியான நேரங்களில் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது நமது தலையாய கடமை .

நம்மை காத்து கொள்வோம்
ரமேஷ், மக்கள் தொடர்பு அதிகாரி, ஸ்ரீ சவுடாம்பிகா கல்வி நிறுவனங்கள், அருப்புக்கோட்டை: ஞாயிற்று கிழமை வெளியில் செல்லாமல் வீட்டில் இருக்கலாம். இதனால் பொது இடங்களில் கூட்டம் இல்லாமல் நோய் தொற்று பரவுவது குறையும். முன்எச்சரிக்கையாக இருப்பதால் நோயின் வீரியம் குறைய வாய்ப்பு உள்ளது.

நோய் பற்றி மக்களிடம் ஒரு விழிப்புணர்வு ஏற்படும். வீட்டில் இருப்பதால் நோய் பரவாமல் இருப்பதுடன் மருத்துவர்களின் பணி குறைகிறது. மனிதன் மூலம் மனிதனுக்கு பரவுவது தவிர்க்கப் படுகிறது. ஒருநாள் வீட்டில் அமைதி காப்போம். குடும்பத்துடன் மனம் விட்டு பேசுவோம். கொரோனா பரவுவதை தடுப்போம். நம் வாழ்வு மேம்பட சில நாட்கள் நமக்காக நம்மை காத்து கொள்வோம். மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தும் முன் எச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்றுவோம்.

ஞாயிறு தேர்வை வரவேற்கிறோம்
மருதுராஜ், ஊராட்சி தலைவர், சத்திரரெட்டியபட்டி, விருதுநகர்: கொரோனா அச்சுறுத்தலை தவிர்க்க துவக்க கட்டத்திலே அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது. இது மிகவும் வரவேற்கதக்கது. பொதுமக்களின் நலனில் அரசு பணிபுரியும் போது பொதுமக்கள் தேவையற்ற வதந்திகளை பரப்பவும், நம்பவும் வேண்டாம். பிரதமர் அறிவித்துள்ள சுய ஊரடங்கு நம் நன்மைக்காக அறிவிக்கப் பட்டதே. விடுமுறை காலம் என்பதால் ஞாயிற்று கிழமை தேர்வு செய்யப் பட்டுள்ளது வரவேற்கதக்கது. நமக்காக உழைப்பவர் களை கைதட்டி பாராட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

தவிர்ப்பதில் தப்பில்லை
ராஜகுமாரி, குடும்பத்தலைவி, விருதுநகர்: டாக்டர்கள், அரசு ஊழியர்கள், பத்திரிகையா ளர்கள் பொது மக்களுக்காக உழைக்கின்றனர். இவர்களை கவுரவிக்கும் வகையில் கைதட்ட அழைப்பு விடுத்தது பொதுமக்களால் இயன்ற குறைந்தபட்ச நன்றி தெரிவிப்பாகவே கருதுகிறேன். அதை கட்டாயம் செய்வேன். தற்போது கொரோனா விழிப்புணர்வில் நாம் முக்கிய கட்டத்தில் உள்ளோம். பொதுமக்கள் இடையே நல்ல முறையில் விழிப்புணர்வு சென்றடைந்து கொண்டிருக்கிறது. நாளை நாம் பின்பற்றும் ஊரடங்கு அரசு நிர்வாகத்திற்கு பெரும் உதவியாக இருக்கும். கொரோனாவை கட்டுபாட்டுக்குள் கொண்டு வரும் வரை நாம் ஒன்றாக கூடுவதை தவிர்ப்பதில் தப்பில்லை.
-நமது நிருபர் குழு-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X