பொது செய்தி

இந்தியா

மோடி பேச்சால் எழுச்சி: மீண்டது பங்கு சந்தை

Updated : மார் 21, 2020 | Added : மார் 21, 2020 | கருத்துகள் (100)
Share
Advertisement

மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களாக, சரிவைச் சந்தித்த பங்குச் சந்தைகள், நேற்று எழுச்சி பெற்றன. மும்பை பங்குச் சந்தையின், 'சென்செக்ஸ்' நேற்று, 1627 புள்ளிகள் உயர்ந்தது.



latest tamil news



உலக நாடுகள், 'கொரோனா' தாக்குதலால் ஏற்படும் பொருளாதார சரிவை தடுக்கும் விதத்தில் எடுத்து வரும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, பங்குச் சந்தைகள் உயர்ந்தன. உள்நாட்டைப் பொறுத்தவரை, பிரதமர் மோடி, கொரோனாவால் பாதிக்கப்படும் துறைகளுக்கு உதவ, சிறப்பு நடவடிக்கை குழு அமைக்கப்படும் என அறிவித்துள்ளதை அடுத்து, சந்தையில் சாதகமான நிலை ஏற்பட்டது.


latest tamil news



வர்த்தகத்தின் இடையே, 2485 புள்ளிகள் வரை உயர்ந்த சென்செக்ஸ், வர்த்தகத்தின் இறுதியில், 1627.73 புள்ளிகள் உயர்ந்து, 29915.96 புள்ளிகளில் நிலைபெற்றது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையின், 'நிப்டி' 482 புள்ளிகள் அதிகரித்து, வர்த்தகத்தின் இறுதியில், 8745.45 புள்ளிகளில் நிலை பெற்றது. நேற்றைய வர்த்தகத்தில், ஓ.என்.ஜி.சி., நிறுவன பங்குகள், 18 சதவீதம் அளவுக்கு உயர்வைக் கண்டன. இதையடுத்து, எச்.யு.எல்., அல்ட்ராடெக் சிமென்ட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டி.சி.எஸ்., எச்.டி.எப்.சி., ஐ.டி.சி., ஏஷியன் பெயின்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள், அதிக விலை உயர்வை கண்டன. மாறாக, எச்.டி.எப்.சி., பேங்க், இண்டஸ்ட்இண்ட் பேங்க் ஆகிய நிறுவன பங்குகள், விலை சரிவை கண்டன.

Advertisement




வாசகர் கருத்து (100)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
22-மார்-202009:27:44 IST Report Abuse
karutthu ஆனால் அந்நிய செலவாணி படு பாதாளத்தில் இருக்கே முதலில் அதை உயர்த்துங்கள்
Rate this:
Share this comment
Nallavan Nallavan - என்னை மேலும் பிரபலப்படுத்திய போலிக்கு நன்றி ,இந்தியா
22-மார்-202011:18:55 IST Report Abuse
Nallavan Nallavanஉண்மைத் தகவல் என்னவென்றால், அன்னியச் செலாவணி கையிருப்பு போதிய அளவில் இருக்கிறது.. அன்னியச் செலாவணி அதிகம் நம்மிடமிருப்பதும் ஆபத்தே .. எந்த நாட்டின் அன்னியச் செலாவணி நம்மிடம் இருக்கிறதோ அந்த நாட்டின் பணத்துக்கு நாம் அதிக விலை கொடுக்கவேண்டியிருக்கும் ........
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
22-மார்-202007:25:38 IST Report Abuse
Sanny உலகத்தில் இருக்கும் எல்லா தலைவர்கள், பொருளாதார வளர்ச்சிக்காக போராடுறாங்க, கொலை வெறி கொரானாவை எதிர்த்து இந்த நேரத்தில் ஜாதி, மதம், நாடு என்று பார்க்காமல் எல்லோரும் ஒன்று சேரனும்.
Rate this:
Share this comment
Cancel
Palani Selvam - Ulsan,தென் கொரியா
22-மார்-202001:55:09 IST Report Abuse
Palani Selvam போ
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X