சம்பவம் செய்தி

தமிழ்நாடு

துப்பாக்கி விற்ற டாக்டர் உட்பட மூன்று பேர் கைது

Added : மார் 21, 2020
Share
Advertisement

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே கள்ளத்துப்பாக்கி விற்க முயன்ற டாக்டர் உட்பட மூவரை, போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர், கும்பகோணம் பகுதியில், கள்ளத்துப்பாக்கி புழக்கம் இருப்பதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. விசாரித்த போலீசார், விளந்தகண்டம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல், 35, என்பவரை, நேற்று முன்தினம் நள்ளிரவு கைது செய்தனர். விசாரணையில், அவர், சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடையவர் என்பதும், துப்பாக்கிகள் வைத்திருந்ததும் தெரிந்தது. துப்பாக்கியை, திருப்பனந்தாள் அடுத்த மகாராஜபுரத்தைச் சேர்ந்த டாக்டர் ராம்குமார், 42, என்பவரிடம் வாங்கியதாக தெரிவித்தார். துப்பாக்கிகளை விற்க டாக்டருக்கு உதவியாக, தானும், முட்டக்குடியைச் சேர்ந்த அரவிந்தன், 40, ஆகியோர் இருந்து வருவதாக தெரிவித்தார். இதையடுத்து, திருப்பனந்தாள் போலீசார், டாக்டர் ராம்குமார், அரவிந்தனை நேற்று முன்தினம் நள்ளிரவு கைது செய்து, டாக்டர் வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு, ஐந்து ஏர் கன், ஒரு ரிவால்வர், இரண்டு பெல்ட் ரிவால்வர் என, எட்டு துப்பாக்கிகள், 67 தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். டாக்டர் ராம்குமார், ரஷ்யாவில், எம்.பி.பி.எஸ்., - எம்.டி., படித்து, கும்பகோணம் அருகே சோழபுரத்தில் உள்ள ஒரு கிளினிக்கில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு துப்பாக்கிகள் மீது ஆர்வம் இருந்ததால், வெளிநாடுகளில் இருந்து அனுமதி இல்லாமல், துப்பாக்கி எடுத்து வரும் நபர்களிடம், குறைந்த விலைக்கு வாங்கி, மற்றவர்களுக்கு அதிக விலைக்கு விற்று வந்துள்ளார். இதற்கு, முகவர்களாக சக்திவேல், அரவிந்தன் ஆகியோர் செயல்பட்டது, விசாரணையில் தெரிந்தது. மூன்று பேரிடமும், தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X