சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக்கிலிருந்து விழுந்தவர் சாவு

Added : மார் 21, 2020
Share
Advertisement

திருச்சி: பைக்கில் சென்றவர் நிலைதடுமாறி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். திருச்சி, வையம்பட்டி அருகே உள்ள வீரமலைப்பட்டியைச் சேர்ந்தவர் இளங்கோவன், 50. விவசாயியான இவர், நேற்று காலை அதே ஊரில் உள்ள டீக்கடைக்கு ஸ்பிளண்டர் பைக்கில் சென்றார். அவர் மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, நிலைதடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தார். உடனடியாக மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இளங்கோவன், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். வையம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X