சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காலி நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி: விவசாய சங்க தலைவர் மீது வழக்கு

Added : மார் 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

திருச்சி: நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றதாக விவசாய சங்க தலைவர் உள்ளிட்ட, ஏழு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். திருச்சி, கரூர் பைபாஸ் சாலை, அண்ணாமலை நகரில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை, லாரன்ஸ் எட்வர்டு என்பவர் குத்தகைக்கு வாங்கி இருந்தார். அந்த இடம், உறையூரைச் சேர்ந்த பஜ்லுஹக் என்பவருக்கு சொந்தமானது. 'இந்த இடம் தனக்கு சொந்தமானது' என்று கூறி, நிர்மலா என்பவர் போலி ஆவணங்களுடன், அதை ஆக்கிரமிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அவருக்கு ஆதரவாக, நேற்று முன்தினம் விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்டோர், இடத்தை ஆக்கிரமிக்க முயன்றதாக, கோட்டை போலீசில் எட்வர்டு புகார் அளித்தார். அதன்பேரில் நிர்மலா, அய்யாக்கண்ணு உள்ளிட்ட, ஏழு பேர் மீது வழக்கு பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
04-ஏப்-202010:36:12 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan நம்ம கோமண அய்யாக்கண்ணு பேரை பேப்பரில் பாத்தாச்சு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X