சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருப்பதி மருத்துவமனையில் முதியவர் உயிரிழப்பு

Added : மார் 21, 2020
Share
Advertisement

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை சேர்ந்தவர் கரிமுல்லா, 75. இவருக்கு தொடர் காய்ச்சல், சளி, நாவறட்சி ஏற்பட்டது. அவரை உறவினர்கள், சில நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம், குப்பம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து, பாதுகாப்பு கவசங்களுடன் அவரை தனிமைப்படுத்தி, திருப்பதி சி.எம்.எஸ்., மருத்துவமனையில், இரண்டு நாட்களுக்கு முன்பு சேர்த்தனர். இந்நிலையில், அவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், 'கரிமுல்லாவுக்கு, கடந்த ஆறு மாதங்களாக இதய நோய் இருந்து வந்துள்ளது. இதில், அவருக்கு சுவாச பிரச்னையுடன், காய்ச்சலும் ஏற்பட்டு உயிரிழந்தார். அவருக்கு எடுக்கப்பட்ட ரத்த மாதிரியில், கொரோனா அறிகுறி இல்லை' என, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X