தமிழ்நாடு

'கொரோனா வைரஸ்' எதிரொலி: விழிப்புணர்வு, தடுப்பு நடவடிக்கை தீவிரம்

Added : மார் 21, 2020
Share
Advertisement

ஏற்காடு: கொரோனா பாதுகாப்பு குறித்து, ஏற்காட்டில், மக்களுக்கு அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கொரோனா தொற்று ஏற்படாமல் தடுப்பது குறித்து, ஏற்காடு ஒன்றிய அலுவலகத்தில், ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. பி.டி.ஓ. குணசேகர் தலைமை வகித்தார். அதில், விழிப்புணர்வு துண்டு பிரசுரம் அதிகளவில் வினியோகித்தல்; அனைத்து துறை அதிகாரிகள் மூலம், கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தல்; வெளியூரில் வேலைக்கு சென்றுவிட்டு, ஏற்காடு வருவோரின் செயல்பாடு, உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணிக்க முடிவு செய்யப்பட்டது. பின், கிராம சந்திப்புகளான நாகலூர், செம்மநத்தம், ஒண்டிக்கடை ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில், அதிகாரிகள், கொரோனா வராமல் தற்காத்துக்கொள்ள அடிக்கடி கைகளை நன்கு கழுவுதல்; வீட்டைச்சுற்றி கிருமி நாசினி அடிக்கடி பயன்படுத்தல்; சிறிது இடைவெளி விட்டு பிறருடன் பேச வேண்டும்; வாயில் துணி வைத்து இரும வேண்டும் எனக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குறைந்தளவில் செல்லும் வாகனங்கள், சுங்க வசூல் மையம், வனத்துறை சோதனைச்சாவடிகளில் நிறுத்தப்பட்டு, சுகாதாரத்துறை மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்பே, மலைப்பாதையில் அனுமதிக்கப் படுகின்றன.

கை கழுவும் வசதி: சேலத்திலிருந்து, தாரமங்கலம் செல்லும் சாலையிலுள்ள, சித்தனூர் பஸ் ஸ்டாப்பில், நேற்று, ஊராட்சி தலைவர் ராஜன் அறிவுரைப்படி, தண்ணீர் வசதியுடன், பேசின் அமைத்து, சோப் வைக்கப்பட்டுள்ளன. அங்கு வரும் மக்கள், கை கழுவி சுத்தப்படுத்திக்கொண்டனர்.

துண்டு பிரசுரம்: ஆத்தூர் நகரில், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட மக்கள் கூடுமிடங்களில், கொரோனா விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. அதில், நகராட்சி தூய்மை பணியாளர், தூய்மை இந்தியா திட்ட பணியாளர், மக்களிடம் சோப்பு போட்டு கைகழுவுதல், சுத்தமாக இருக்க, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, கொரோனா வைரஸ் பாதிப்பு, தடுக்கும் வழிமுறை குறித்து, துண்டு பிரசுரம் வழங்கினர்.

ஏற்காட்டுக்கு வராதீர்! ஏற்காட்டிலுள்ள தங்கும் விடுதி, சுற்றுலா தலங்கள் உள்ளிட்டவை, வரும், 31 வரை மூடப்பட்டுள்ளது. மீறி ஏற்காடு வருவோர், சோதனைச்சாவடியில் திருப்பி அனுப்பபடுவர். சிலர், பஸ்களில் ஏற்காடு வந்து, சுற்றிப்பார்த்துவிட்டு, நண்பர்களின் வீடுகளில் தங்கிச்செல்கின்றனர். இதனால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், சுற்றுலா பயணியர், தாங்களாகவே, ஏற்காடு வருவதை, வரும், 31 வரை தவிர்க்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X