பொது செய்தி

தமிழ்நாடு

தடையை மீறி மாட்டுச்சந்தை விரட்டியடித்த அதிகாரிகள்

Added : மார் 21, 2020
Share
Advertisement

ஓமலூர்: தடையை மீறி மாட்டுச்சந்தை நடத்திய வியாபாரிகளை, அதிகாரிகள் விரட்டியடித்தனர். 'கொரோனா வைரஸ்' நோய் பரவாமல் தடுக்க, சேலம் மாவட்டம், ஓமலூர், முத்துநாயக்கன்பட்டி, பெருமாள் கோவில் மாட்டுச்சந்தை, மறு அறிவிப்பு வரும் வரை செயல்படாது என, அதிகாரிகள் அறிவித்தனர். ஆனால், அதை மீறி, நேற்று, சந்தை வளாகத்தை தவிர்த்து, எம்.செட்டிப்பட்டி ஊருக்குள், ஆங்காங்கே மாடு வியாபாரம் நடந்தது. இதுகுறித்து, மக்கள், அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். பின், தொளசம்பட்டி போலீசார், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் வந்து, வியாபாரிகளை விரட்டினர். அத்துடன், முத்துநாயக்கன்பட்டி காய்கறி சந்தையில் திரண்டிருந்த வியாபாரிகளையும், போலீசார் அனுப்பிவைத்தனர்.
வீரகனூரில்...: கெங்கவல்லி, வீரகனூரில், இன்று மாட்டுச்சந்தை நடக்கவிருந்த நிலையில், நேற்று, ஆத்தூர் ஆர்.டி.ஓ., துரை, கெங்கவல்லி தாசில்தார் சிவக்கொழுந்து ஆகியோர், வரும், 31 வரை, சந்தை செயல்படாது என, அறிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X