பொது செய்தி

தமிழ்நாடு

அச்சுறுத்தும் 'கொரோனா': போட்டோகிராபர்கள் கவலை

Added : மார் 21, 2020
Share
Advertisement

சேலம்: சேலம் மாவட்ட வீடியோ மற்றும் போட்டோகிராபர் நலச்சங்க தலைவர் சூர்யா தலைமையில் நிர்வாகிகள், நேற்று, கலெக்டரிடம் அளித்த மனு: கொரோனா வைரஸ் நோய் தடுப்பால், வரும், 31 வரை, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு, பொது நிகழ்வு, திருமண வைபவங்களை தவிர்க்க, அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், வங்கி, தனியார் நிறுவனங்களில் கடன் பெற்று, தொழில் செய்யும் எங்களுக்கு, வருவாய்க்கு வழியில்லை. இந்த பாதிப்பிலிருந்து மீள, குறைந்தது இரு மாதமாகும் என்பதால், வங்கியில் தாமதமாக செலுத்தும் தவணைத்தொகைக்கு, அபராத வட்டியை தள்ளுபடி செய்து, கால நீட்டிப்பு வேண்டும். தனியார் நிறுவனத்திடமும், கால அவகாசம் பெற்றுத்தர வேண்டும். இப்பிரச்னையை, அரசின் கவனத்துக்கு எடுத்துச்சென்று, மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர். அதேபோல், சேலம் மாவட்ட அனைத்து சுற்றுலா வாகன உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் நலச்சங்கத்தினர், கலெக்டரிடம் மனு கொடுத்து முறையிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X