பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்திலுள்ள அனைத்து கோவில்களும் மூடல்

Added : மார் 21, 2020
Share
Advertisement

சேலம்: சேலம் மாவட்டத்தில், ஹிந்து சமய அறிநிலையத்துறை கோவில்கள், நேற்று முதல் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளன. 'கொரோனா வைரஸ்' நோய் பரவலை தடுக்க, பொது இடங்களில், அதிகளவில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், சேலம், கோட்டை மாரியம்மன், பெருமாள், சுகவனேஸ்வரர், இரண்டாவது அக்ரஹாரம் காசி விஸ்வநாதர், லட்சுமி நாராயணர், உத்தமசோழபுரம் கரபுரநாதர், தாரமங்கலம் கைலாசநாதர் உள்பட, அனைத்து கோவில்களும், நேற்று முதல் காலவரையின்றி மூடப்பட்டன. அதேநேரம், வழக்கமான பூஜை, அபி ?ஷகம் நடக்கும். பக்தர்களுக்கு அனுமதியில்லை. அன்னதானமும் நிறுத்திவைக்கப்படுகிறது. அதேபோல், மாவட்டத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள, 1,755 கோவில்கள், மறு உத்தரவு வரும் வரை மூட, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தனியார் கோவில்களும், மக்கள் நலன் கருதி மூட, அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
சனி பிரதோஷ பூஜை ரத்து: உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: சனி பிரதோஷமான, மார்ச், 21ல்(இன்று), சிறப்பு பூஜை கிடையாது. நித்திய பூஜை வழக்கம்போல் நடக்கும். கோவில் நடை அடைக்கப்படாது. வரும், 23, 24ல், அமாவாசை சிறப்பு பூஜைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சிறப்பு யாகம்: தலைவாசல், வடகுமரையில், அப்பண்ண சுவாமியின், 106வது ஜெயந்தி விழா, நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது, 'கொரோனா' வைரஸ் நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, சிறப்பு யாகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, அப்பண்ண சுவாமி உருவ படத்துடன் திருவீதி உலா வந்தனர். பக்தர்கள், காவடி சுமந்தபடி வந்தனர். பின், அன்னதானம் வழங்கப்பட்டது.

அனைத்து மதத்தினருக்கு அறிவுரை: 'கொரோனா வைரஸ்' குறித்து, ஆத்தூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், அனைத்து மதத்தினருடன் ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. ஆர்.டி.ஓ., துரை தலைமை வகித்தார். அதில், கோவில், தேவாலயம், மசூதி ஆகிய இடங்களில், வழக்கமான பூஜை நடத்த வேண்டும். அதேநேரம், வரும், 31 வரை, அதிகளவில் மக்கள் கூட வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டது. மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், தாசில்தார்களான, ஆத்தூர் பிரகாஷ், கெங்கவல்லி சிவக்கொழுந்து, பெத்தநாயக்கன்பாளையம் வெங்கடேசன், ஆத்தூர், கெங்கவல்லி பகுதி, ஹிந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர்கள், பாதிரியார், முத்தவல்லி உள்ளிட்ட மத வழிபாட்டு குழுவினர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X