பொது செய்தி

தமிழ்நாடு

'பி.எப்., நிறுவனம் ரூ.15 கோடி சேமிக்க பாரத ஸ்டேட் வங்கியுடன் ஒப்பந்தம்'

Added : மார் 21, 2020
Share
Advertisement
சேலம்: ''பி.எப்., நிறுவனம், ஆண்டுக்கு, 15 கோடி ரூபாய் சேமிக்க, பாரத ஸ்டேட் வங்கியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது,'' என, சேலம் வருங்கால வைப்பு நிதி உதவி கமிஷனர் நவீன் இம்மானுவேல் கூறினார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, மத்திய அறக்கட்டளை வாரியத்தின், 226வது கூட்டம், கடந்த, 5ல், டில்லி, சக்தி பவனில், மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சர்

சேலம்: ''பி.எப்., நிறுவனம், ஆண்டுக்கு, 15 கோடி ரூபாய் சேமிக்க, பாரத ஸ்டேட் வங்கியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது,'' என, சேலம் வருங்கால வைப்பு நிதி உதவி கமிஷனர் நவீன் இம்மானுவேல் கூறினார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, மத்திய அறக்கட்டளை வாரியத்தின், 226வது கூட்டம், கடந்த, 5ல், டில்லி, சக்தி பவனில், மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சர் சந்தோஷ் கங்க்வார் தலைமையில், செயலர் ஹீராலால் சமாரியா, மத்திய அறக்கட்டளை வாரிய உறுப்பினர் சுனில் பர்த்வால் முன்னிலையில் நடந்தது. அதில், வருங்கால வைப்பு நிதியில், 2019 - 20க்கான உறுப்பினர்களின் சேமிப்பு தொகைக்கு, 8.5 சதவீதம் வட்டி வழங்க, மத்திய வாரியம் சிபாரிசு செய்துள்ளது. 2008 செப்., 29க்கு முன், அப்போதைய தொழிலாளர் ஓய்வூதிய திட்டப்படி, விருப்ப அடிப்படையில், 6.3 லட்சம் ஓய்வூதியதாரர் பயனடைய, தொகுப்பு தொகை பெற்றவர், 15 ஆண்டு முடிந்தவுடன், மீண்டும் ஓய்வூதியம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி நிறுவனத்துக்கு, ஆண்டுக்கு, 15 கோடி ரூபாய் சேமிப்பு ஏற்படும் வகையில், பாரத ஸ்டேட் வங்கியுடன் பேச்சு நடத்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பணியிலுள்ள தொழிலாளர்கள் இறக்கும்பட்சத்தில், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு, 2.5 லட்சம் வழங்குவதற்கான சலுகையை நீட்டிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X