பொது செய்தி

தமிழ்நாடு

இன்று உலக வன நாள்: இந்தியாவை பாதுகாக்க வனபரப்பை அதிகப்படுத்துவோம்!

Added : மார் 21, 2020
Share
Advertisement

சேலம்: வனபரப்பை அதிகப்படுத்தி, இந்தியாவை பாதுகாக்க, அனைவரும், உலக வன நாளில் உறுதியேற்போம்.
இதுகுறித்து, சேலம் மாவட்ட வன அலுவலர் பெரியசாமி கூறியதாவது: உலக வனநாள், மார்ச், 21ல்(இன்று) கொண்டாடப்படுகிறது. பிரேசில், அமேசான் காடுகள் பெருமளவு அழிந்துவிட்டன. வனத்தீயால், ஆஸ்திரேலியாவில் காடுகள் அதிகம் நாசமாகி, நடப்பாண்டு வன அழிவுகள் ஆண்டாகி விட்டது. அந்த பாதிப்புகளிலிருந்து மீள, வன வளம், விலங்குகளை பாதுகாக்க, வன பாதுகாப்பை உறுதிப்படுத்த, அனைவரும் உறுதியேற்போம். இந்திய வனபரப்பு, 33 சதவீதத்துக்கு பதில், 23 சதவீதமாக உள்ளது. 10 சதவீத பாதிப்பை ஈடுகட்ட, அதிகளவில் மரக்கன்றுகள் நட வேண்டும். அதற்காக, அரசு, தனியார் நிலங்கள், வெற்றிட நில பகுதிகளை, பசுமைநில பகுதிகளாக மாற்ற, அனைவரும் பாடுபட வேண்டும். அதன்மூலம், வனப்பகுதி இலக்கை எட்டலாம். அப்படி செய்தால் மட்டுமே, இயற்கை பேரிடரான, சுனாமி, புயல், வெள்ளப்பெருக்கு, வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து விடுபட முடியும். விலங்குகளை வேட்டையாடி, உணவாக உட்கொள்வதால், எதிர்கொள்ள முடியாத, பிணிகள், உலகை அச்சுறுத்திவருகின்றன. எந்த விலங்குகளில், எந்த வைரஸ் இருக்கிறது என்பதை சொல்ல முடியாது. அதனால், விலங்குகளை வேட்டையாடக்கூடாது. அதை, வளர்ப்பு பிராணிகளாகவும் மாற்றிவிடக்கூடாது. இரண்டுமே ஆபத்து. அவைகள், வனப்பகுதிகளில் இயற்கையாக வாழ வேண்டும். அப்போது தான், வனம்; வளம் பாதுகாக்கப்படும். விலங்குகளை அச்சுறுத்தவும் கூடாது. மீறி செயல்பட்டால், வனச்சட்டங்கள் மூலம், ஏழாண்டு சிறை தண்டனை விதிக்கும் அதிகாரம் உள்ளது. வனத்தை பாதுகாப்போம், இயற்கையை நேசிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X