பொது செய்தி

தமிழ்நாடு

வனப்பொருள் விற்பனை மையம் திறப்பு

Added : மார் 21, 2020
Share
Advertisement

சேலம்: பெத்தநாயக்கன்பாளையம், கருமந்துறை வனச்சரக அலுவலகத்தில், வனப்பொருட்கள் விற்பனை மையத்தை, நேற்று, மாவட்ட வன அலுவலர் பெரியசாமி திறந்து வைத்தார். அங்கு, தேன், நெல்லி, கொய்யா, மாம்பழம், ஆரஞ்சு உள்ளிட்ட மலைப்பழங்கள் கிடைக்கும். அதை, பழச்சாறாகவும் தயாரித்து விற்பனை செய்யப்படும். தவிர, சிறு தானிய மகசூலான கம்பு, சோளம், கேழ்வரகு, திணை, சாமை, வரகு உள்ளிட்டவைகளை, பிஸ்கட்டாக தயாரித்து விற்கப்படும். காலை, 8:00 முதல், மாலை, 5:00 மணி வரை, மையம் செயல்படும். விடுமுறை எதுவும் கிடையாது என, விழாவில் அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து, சந்தியூர் ஆராய்ச்சி மைய வேளாண் திட்ட அலுவலர் ஸ்ரீதர் கூறியதாவது: தமிழ்நாடு விதை, வேளாண் மையம், வேளாண் அறிவியல் மையம் சார்பில், வனப்பொருட்கள் விற்பனை மைய கட்டுமானத்துக்கு, மூன்று லட்சம் ரூபாய், பழச்சாறு, பிஸ்கட் தயாரிப்பு உபகரணங்களுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, விற்பனை மையம் செயல்படுகிறது. அதை, கருமந்துறை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அடுத்து, சேலம், குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில், விற்பனை மையம், விரைவில் தொடங்கப்படும். கருமந்துறை மையத்தில், பொருட்கள் தயாரித்து, சேலத்தில், விற்பனை நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X