பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக அரசு போக்குவரத்துக்கழகங்களுக்கு ரூ.50 கோடியில் 350 மீட்பு வாகனம் வாங்க முடிவு

Added : மார் 21, 2020
Share
Advertisement

சேலம்: அரசு போக்குவரத்துக்கழகங்களுக்கு, 50 கோடி ரூபாயில், 350 பழுது நீக்கு வாகனங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்துக்கழக, எட்டு கோட்டம், 21 மண்டலம், 322 பணிமனையில், 22 ஆயிரத்து, 632 பஸ்கள் பராமரிக்கப்பட்டு இயக்கப்படுகின்றன. கடந்த ஐந்தாண்டில், போக்குவரத்துக்கழகங்களுக்கு புது பஸ்கள் - 6,900, மறு சீரமைப்பு செய்யப்பட்ட பஸ்கள் - 3,400 வழங்கப்பட்டுள்ளன. அவற்றை பராமரிக்க, வழித்தடங்களில் பழுதாகி நிற்கும் நிலையில் சரிசெய்ய, போதிய அளவில் மீட்பு வாகனங்கள், போக்குவரத்துக்கழகங்களில் இல்லை. பழைய பாடாவதி நிலையிலேயே மீட்பு வாகனங்கள் செயல்பட்டன. இதனால், எட்டு கோட்டங்களுக்கு, 50 கோடி ரூபாய் செலவில், 350 மீட்பு வாகனங்கள் வாங்க முடிவு செய்து, அதற்கான ஆர்டர், கரூர், பெங்களூரு, சென்னையில் உள்ள பிரபல நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, அதிகாரிகள் கூறுகையில், 'பழைய மீட்பு வாகனங்களில் போதிய அளவு நவீன உபகரணங்கள் இல்லை. புது பஸ்களில் ஏற்பட்ட சிறு பழுதை கூட சரிசெய்ய முடியாத நிலை உள்ளது. தற்போது வரவுள்ள புது மீட்பு வாகனங்கள், அனைத்து உபகரணங்களுடன், பேரிடர் காலங்களில் பயன்படுத்த கூடியதாக வடிவமைக்கப்படவுள்ளன' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X