சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலைப்பணியாளர் மீது தாக்குதல்?

Added : மார் 21, 2020
Share
Advertisement

ஓமலூர்: சாலைப்பணியாளர் தாக்கப்பட்டது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். சேலம் மாவட்டம், பூசாரிப்பட்டி, மாதையன்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர், 54. ஓமலூர் நெடுஞ்சாலைப்பணியாளர். நேற்று, பூசாரிப்பட்டி, நரசுஸ் கல்லூரி எதிரே, மழைநீர் கால்வாய் கட்டும் பணிக்கு, சாலை ஆய்வாளர் கார்த்தியுடன், நில அளவீடு பணியில் ஈடுபட்டார். அதே பகுதியைச் சேர்ந்த நந்தகுமார், 35, வீட்டின் சுற்றுச்சுவரையொட்டி, நில அளவீடு செய்தபோது, ஜெய்சங்கர், நந்தகுமார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, அவர்கள் கைகலப்பில் ஈடுபட்டு, இருவரும், ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். இதுகுறித்து, ஓமலூர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம், சாலைப்பணி நிர்வாகிகள் புகாரளித்தனர். சம்பவம் குறித்து, தீவட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X