சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீசிடம் தப்ப பாலத்திலிருந்து குதித்த வழிப்பறி கொள்ளையனுக்கு கால் முறிவு

Added : மார் 21, 2020
Share
Advertisement

சேலம்: போலீசிடமிருந்து தப்ப, பாலத்திலிருந்து எகிறி குதித்த வழிப்பறி கொள்ளையனுக்கு, கால்முறிவு ஏற்பட்டதால், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சேலம், வேடுகாத்தாம்பட்டி, சத்யா நகரைச் சேர்ந்த, பெருமாள் மகன் ஏழுமலை, 55; வெள்ளி பட்டறை உரிமையாளர். நேற்று முன்தினம் இரவு, 10:15 மணிக்கு, பட்டறை அருகே நடந்து சென்றபோது, மர்ம நபர், கத்தியை காட்டி மிரட்டி, அரை கிலோ வெள்ளி கட்டி, 500 ரூபாயை பறித்துக்கொண்டார். ஏழுமலை புகார்படி, இரும்பாலை போலீசார், மர்ம நபரை தேடினர். நேற்று காலை, 3:00 மணிக்கு, அங்குள்ள, எறங்காடு, முனியப்பன் கோவில் அருகே, நின்றிருந்த வாலிபரை, போலீசார் சுற்றிவளைத்தனர். அப்போது, அவர்களிடமிருந்த தப்ப, பாலத்திலிருந்து வாலிபர் எகிறி குதித்தார். அப்போது, காலில் முறிவு ஏற்பட்டதால், போலீசார் மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில், ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த மோகன்ராஜ் மகன் கவுதம்ராஜ், 24, என்பதும், ஆட்டையாம்பட்டி, மகுடஞ்சாவடி போலீஸ் ஸ்டேஷன்களில், திருட்டு, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X