பொது செய்தி

தமிழ்நாடு

கர்நாடகா பஸ்கள் நிறுத்தத்தால் ரயிலில் கூட்டம்

Added : மார் 21, 2020
Share
Advertisement

ஈரோடு: கர்நாடகா செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டதால், ஈரோடு வழியாக கர்நாடகா செல்லும் ரயில்களில் பயணிகள் அதிகமாக பயணித்தனர். கொரோனா வைரஸ் பீதி துவங்கியது முதல், ஈரோடு பகுதியில் பல்வேறு தொழிற்சாலைகளில் பணி செய்த வெளி மாநிலத்தவர், தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். இதற்கிடையில், பல்வேறு மாநிலங்களில் இருந்து ஈரோடு வந்த பிற மாநிலத்தவர்கள், நேரடியாக அவர்கள் பணி செய்யும் இடங்களுக்கு அனுமதிப்பதில்லை. காய்ச்சல், சளி, இருமல் உள்ளதா என பரிசோதித்து, அவர்கள் செல்லும் இடத்தில் விலாசம் பெற்று அனுப்புகின்றனர். நேற்று, ஈரோட்டில் உள்ள சில தொழிற்சாலைக்கு பீகார், ராஜஸ்தானில் இருந்து, 170 பேர் வந்தனர். அவர்கள் முழு பரிசோதனைக்குப்பின், ஆலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். தவிர, 300க்கும் மேற்பட்டவர்கள், வெளி மாநிலத்துக்கு விடுமுறை வழங்கி அனுப்பி வைக்கப்பட்டனர். தவிர, கர்நாடகாவுக்கு ஈரோடு, சத்தியமங்கலம், அந்தியூர் - பர்கூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டது. இதனால், நேற்று கேரளாவில் இருந்தும், தென் மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகா மாநிலம் வழியாக செல்லும் ரயில்களில் செல்ல அதிக பயணிகள் சென்றனர். குறிப்பாக, பெங்களூரு, மைசூர், சாம்ராஜ் நகர் பயணிகள் அதிக எண்ணிக்கையில் சென்றனர். இவர்களுக்கு தெர்மல் டிஜிட்டல் ஸ்கேனர் கருவி மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்து, அதன் விபர துண்டு சீட்டை, 'ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் மெடிக்கல் டீம்' என்ற சீல் வைத்து கொடுத்து அனுப்பினர். அதேசமயம் பள்ளி, கல்லூரி, பெரிய நிறுவனங்களுக்கு விடுமுறை விடுக்கப்பட்டதாலும், கொரோனா பீதியாலும், ஈரோடு பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் குறைந்து காணப்பட்டது. கர்நாடகா மாநில பஸ்கள், தொலைதூர பஸ்கள் சில நிறுத்தப்பட்டதால், வழக்கமான கூட்டமின்றி பஸ் ஸ்டாண்ட் வெறிச்சோடி காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X