பொது செய்தி

தமிழ்நாடு

பிரப் ஆலய வழிபாடு: பேஸ்புக்கில் ஒளிபரப்பு

Added : மார் 21, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு சி.எஸ்.ஐ., பிரப் நினைவாலயத்தில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், செயலாளர் ஆல்ட்ரின் ராஜேஸ்குமார் தலைமையில், நேற்று நடந்தது. முதன்மை குருக்கள் ரிச்சர்டு துரை, ஜேக்கப் லிவிங்ஸ்டன், சர்ச்சில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை பற்றி பேசினர். பின், அவர்கள் கூறியதாவது: தற்போது தவக்காலம் என்பதால், பிற கூட்டங்கள் ரத்து செய்யப்படுகிறது. ஞாயிறு நடக்கும் ஆராதனை கூட்டத்துக்கு நேரம் குறைக்கப்பட்டுள்ளது. காலை முதல் ஆராதனை, 7:00 முதல், 7:30 மணி வரை, இரண்டாவது ஆராதனை, 9:00 முதல், 9:30 மணி வரை நடக்கும். வயதானவர்கள், குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் வர வேண்டாம். ஆலயத்துக்குள் வரும்போதும், வெளியே செல்லும்போதும் கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும். வழிபாடு முடிந்ததும், நேராக வீடு செல்ல வேண்டும். ஞாயிறு ஆராதனை நிகழ்வு, ஞிண்டிஞணூணிதஞ்டஞிடதணூஞிட என்ற பேஸ்புக் வலைதள பக்கத்தில், நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். மறு அறிவிப்பு வரும் வரை, ஆலய வளாகத்தில் ஞாயிறு வழிபாடு தவிர, ஏற்கனவே திட்டமிட்ட அனைத்து சிறப்பு நிகழ்வு, ஞாயிறு பள்ளி வகுப்பு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X