வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ஒதுக்கீடு; சலுகை பெற 31க்குள் அணுக அழைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ஒதுக்கீடு; சலுகை பெற 31க்குள் அணுக அழைப்பு

Added : மார் 21, 2020
Share

ஈரோடு: தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய திட்டங்களில், குடியிருப்பு ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு, அரசு மூலம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ஒதுக்கீடு பெற்றவர்களில், வட்டிச்சுமையால் விற்பனை பத்திரம் பெறாமல் உள்ளவர்கள், மாத தவணை செலுத்த தவறியதற்கான அபராத வட்டி, முதலாக்கத்தின் மீதான வட்டியை முழுவதுமாகவும், நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்தின் மீதான வட்டியில் வருடத்துக்கு, ஐந்து மாத வட்டியை மட்டும் கணக்கிட்டு தள்ளுபடி செய்து, அரசு ஆணையிட்டுள்ளது. இச்சலுகை வரும், 31 வரை மட்டுமே நடை முறையில் இருக்கும். தகுதியானவர்கள், சம்பந்தப்பட்ட அலுவலகங்களை அணுகி, ஒதுக்கீட்டுக்கான நிலுவை தொகையை, ஒரே தவணையில் செலுத்தி, விற்பனை பத்திரத்தை பெறலாம். மார்ச், 31க்குப்பின் நிலுவை தொகையை செலுத்தும் ஒதுக்கீடுதாரர்களுக்கு, வட்டி தள்ளுபடி சலுகை கிடைக்காது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X