பொது செய்தி

தமிழ்நாடு

வழிபாட்டு ஸ்தல வழிபாடு; டி.ஆர்.ஓ., யோசனை

Added : மார் 21, 2020
Share
Advertisement

ஈரோடு: மாவட்டத்தில் உள்ள வழிபாட்டு ஸ்தலங்களில், பின்பற்ற வேண்டிய நெறிமுறை குறித்த கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. எஸ்.பி., சக்தி கணேசன் முன்னிலை வகித்தார். தலைமை வகித்த டி.ஆர்.ஓ., கவிதா பேசியதாவது: மாவட்ட அளவில், 14 கோவில்களில் நேற்று முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆகம விதிப்படி பூஜை தொடரும். அதுபோல, சர்ச், பள்ளிவாசலில் தொழுகை, வழிபாட்டை குறைவான நபர்கள் மூலம், குறைந்தபட்ச நேரத்தில் மேற்கொள்ள வேண்டும். தேசிய அளவில் இதுபோன்ற வழிமுறை பின்பற்றப்படுகிறது. கொரோனா பாதிப்பு சீராகும் வரை ஒத்துழைப்பு தர வேண்டும். அனைத்து வாரச்சந்தை, கால்நடை சந்தைகள் மூடப்பட்டுள்ளன. திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக பதிவான மண்டப அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மணமக்கள் வீடுகளிலேயே பேசி, குறைவான கூட்டத்துடன் நிகழ்ச்சியை நடத்த கேட்டுள்ளோம்.
ஈரோடு மாவட்ட அரசு ஹாஜி முகம்மது கிபாயத்துல்லா பேசியதாவது: மாவட்டத்தில் உள்ள, 67 பள்ளிவாசல், தொழுகை நடக்கும் இடங்களிலும், அரசின் விதிகளை கடைபிடித்து, கொரோனா பரவாமல் தடுக்க யோசனை தெரிவித்துள்ளோம். வயதானவர்கள், உடல் நலக்குறைவானவர்கள், சிறுவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

ஈரோடு சி.எஸ்.ஐ., பிரப் சர்ச் பொறுப்பாளர்: எங்கள் சர்ச்க்கு உட்பட்ட, 5,600 குடும்பத்தாருக்கும், முன்னெச்சரிக்கை பற்றி தெரிவித்துள்ளோம். ஞாயிறு பிரார்த்தனையை, பேஸ்புக், பிற தொழில் நுட்பம் மூலம் காண ஏற்பாடு செய்துள்ளோம்.

பிற கிறிஸ்தவ, முஸ்லீம் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது: காய்ச்சல் பரிசோதிக்கும் கருவி, மாஸ்க் கிடைப்பதில்லை. இரண்டு ரூபாய் மாஸ்க், 15 முதல், 20 ரூபாய்க்கு விற்கின்றனர். அவை எளிதில் கிடைக்க வழி செய்ய வேண்டும். பவானி - ஜம்பை சாலையில் உள்ள டாஸ்மாக்கில் அதிக அளவில் கூடுவதால், அங்கும் நோய் பரவும். அதை தடுக்க வேண்டும். நடை பயிற்சி மைதானங்களில் அதிகமாக கூடுகின்றனர். கிராமப்புறங்களில் தூய்மைப்பணி, விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

எஸ்.பி., சக்தி கணேசன்: அரசின் விதிப்படி, அதிக மக்கள் கூடும் இடங்களையும் மூடி வருகிறோம். நடைபயிற்சி மைதானங்களை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தினேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X