பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 2 தேர்வறைகளில் கிருமி நாசினி தெளிப்பு

Added : மார் 21, 2020
Share
Advertisement

ஈரோடு: பிளஸ் 2 தேர்வறைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டது. பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் என, பள்ளி கல்வித்துறை அறிவித்தது. இந்நிலையில், நேற்று பிளஸ் 2 உயிரியல், வணிக கணிதம் போன்ற தேர்வுகள் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்து, இரவு, 9:00 மணிக்கு மேல், 'கட்டாயம் தேர்வு நடக்கும்' என அறிவிப்பு வெளியானது. இதன்படி, நேற்று பிளஸ் 2 தேர்வு நடந்தது. தேர்வுக்கு வந்த மாணவர்கள், தேர்வு நடத்தும் அலுவலர்கள் அனைவரும் சோப்பு, லைசால் மூலம் கைகளை சுத்தம் செய்து, தேர்வறைக்கு அனுமதிக்கப்பட்டனர். அதற்கு முன்பாக, தேர்வறைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ஈரோடு, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மையம் உட்பட சில மையங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டதை பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், டி.ஆர்.ஓ., கவிதா ஆய்வு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X