பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு நடவடிக்கை: 31 வரை விசைத்தறிகள் மூடல்

Added : மார் 21, 2020
Share
Advertisement

ஈரோடு: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, மார்ச், 31 வரை விசைத்தறி இயக்கத்தை நிறுத்தி வைப்பதாக, ஈரோடு மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்குகின்றன. இதன் மூலம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாக, மறைமுகமாக பணி செய்கின்றனர். இதன் மூலம், ரேயான், காட்டன், காடாத்துணி தினமும், 2 கோடி மீட்டர் வரை தயாரிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, நாளை முதல், ??ம் தேதி வரை அனைத்து விசைத்தறிகளும் இயங்காதென, ஈரோடு விசைத்தறி உரிமையாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் கந்தவேல் தெரிவித்துள்ளார். இதனால் சங்கத்தில் நேரடியாக பணி செய்யும், 3,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், மறைமுகமாக பணி செய்யும், 4,000 தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள். பிற சங்கங்கள், சங்கங்கள் சாராதவர்களும் பணிகளை நிறுத்துவதால், இரண்டு கோடி மீட்டர் துணி தயாரிப்பு தினமும் பாதிக்கப்படும் என்று, கந்தவேல் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X