சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாலீஸ் போடுவதாக மூதாட்டியிடம் நகை பறிப்பு

Added : மார் 21, 2020
Share
Advertisement

அம்மாபேட்டை: ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டையை சேர்ந்தவர் கமலம், 65; நேற்று வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வந்த இருவர், தங்க நகை தந்தால், பாலீஸ் போட்டு தருவதாக கூறியுள்ளனர்.
இதையடுத்து அணிந்திருந்த இரண்டு பவுன் தங்க சங்கிலி, அரை பவுன் மோதிரத்தை கழற்றி தந்துள்ளார். பெற்றுக்கொண்ட இருவரும், பாலீஸ் போட சுடுதண்ணீர் வேண்டும் என்று கேட்டுள்ளனர். தண்ணீர் வைக்க உள்ளே சென்றபோது, ஆசாமிகள் நகையுடன் ஓட்டம் பிடித்தனர். சுடுதண்ணீருடன் வந்த மூதாட்டி, ஆட்களை காணாமல் ஏமாற்றம் அடைந்தார். அதன் பிறகே, நகையை இழந்தது தெரிய வந்து, அதிர்ச்சி அடைந்தார். இரண்டு நாட்களுக்கு முன், பவானி அருகே நகையை பாலீஸ் செய்து தருவதாக, பெண் ஒருவரிடம், வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. அதே பாணியில், மூதாட்டியிடம் இரண்டரை பவுன் நகை பறித்தது, பரபரப்பை அதிகரித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X