சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணவன், மகளுடன் மொபட்டில் பயணித்த பெண் டெய்லர் சாவு

Added : மார் 21, 2020
Share
Advertisement

மொடக்குறிச்சி: கொடுமுடி அருகே, மொபட் மீது மொபட் மோதியதில், கணவன், மகளுடன் ஒரே மொபட்டில் சென்ற, பெண் டெய்லர் பலியானது, சோகத்தை ஏற்படுத்தியது. கொடுமுடி, வடக்கு புதுப்பாளையத்தை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ், 47; இவர் மனைவி பிரியா, 43; ஈரோட்டில், பிரகாஷ் வீதியில் டெய்லர் கடை வைத்துள்ளனர். இவர்களின் மகள் பிரதீபா, 21; மூவரும் நேற்று காலை, 11:?? மணிக்கு, கொடுமுடியிலிருந்து ஈரோட்டுக்கு, ஹோண்டா மொபட்டில் வந்தனர். ஸ்டீபன்ராஜ் மொபட்டை ஓட்டினார். சாவடிப்பாளையம் செங்காட்டு முனியப்பன் கோவில் அருகே, எதிரே வந்த எக்ஸல் சூப்பர் மொபட்டில் வந்தவர் மோதியதில் மூவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த பிரியா, ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிறிது நேரத்தில் இறந்தார். லேசான காயத்துடன் தந்தை, மகள் உயிர் தப்பினர். விபத்தை ஏற்படுத்தியவர் தப்பி ஓடிவிட்டார். அவரை, மொடக்குறிச்சி போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X